- Advertisement -
Homeபொழுதுபோக்குபாஜகவிலிருந்து விலகிய கௌதமி.. காரணம் சுயநலம்தான்.. கமலிடமும் அப்படித்தான்.. பரபரப்பு கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்

பாஜகவிலிருந்து விலகிய கௌதமி.. காரணம் சுயநலம்தான்.. கமலிடமும் அப்படித்தான்.. பரபரப்பு கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்

- Advertisement -

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் கௌதமி. கமல் ஹாசன், ரஜினிகாந்த் என போட்டிப்போட்டு முன்னணி நடிகர்களுடன் நடித்தார். குறிப்பாக கௌதம் சேலை, கௌதமி தோடு என பெயர் வைத்து அழைக்கப்படும் அளவுக்கு அவரது புகழ் இருந்தது. காலம் செல்ல செல்ல திரைப்படங்களிலிருந்து ஒதுங்கிய அவருக்கு மார்பக புற்றுநோய் வந்தது.

ஒருவழியாக சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீண்ட அவர் கமல் ஹாசனுடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். ஆனால் திடீரென தன்னுடைய மகளின் நலன் கருதி இந்த உறவிலிருந்து வெளியேறுகிறேன் என கூறினார். அதனையடுத்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் அவர் பாஜகவில் இணைந்தார். தற்போது அந்தக் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார் கௌதமி.

- Advertisement -

இதுகுறித்து நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “நடிகை கௌதமி பிஸியாக இருந்தபோதே திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றுக்கொண்டார். ஆனால் குழந்தை பிறந்தபோது கணவரை பிரிந்திருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு மார்பக புற்றுநோய் வந்தது. அப்போது கமல் ஹாசன் உறுதுணையாக இருந்து பல உதவிகளை செய்தார்.

அதன் பிறகு கமல் நடிக்கும் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக கௌதமி இருந்தார். அதனையடுத்து அவருக்கு சம்பளமும் க் இடைத்தது. பிறகு இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் என் மகளின் எதிர்காலம் கருதி நாங்கள் இருவரும் பிரிவதாக கௌதமி அறிவிக்கை வெளியிட்டார். அப்போதுதான் மோடியை சந்தித்து பாஜகவில் இணைந்து அக்கட்சிக்காக உழைத்தார்.

- Advertisement -

இந்த சூழலில் அழகப்பன் தன்னுடைய 25 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்துவிட்டதாக புகார் தெரிவித்திருந்தார். அதில் தொடர்புடைய அழகப்பன் மற்றும் மனைவி நாச்சல் உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கௌதமி தன்னுடைய சொத்து போய்விட்டதே என்றுதான் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அதாவது சுயநலத்தால்தான் விலகியுள்ளார். அதேபோல் மார்பக புற்றுநோய் சரியானதும் கமலிடமிருந்து விலகினார். இப்படி பல விஷயங்களில் கௌதமி சுயநலமாகவே இருக்கிறார்” என்றார்.

- Advertisement -

சற்று முன்