- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டாரு சூப்பர் ஸ்டார்தான்யா... ரிலீஸான முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் மெகா வசூல் சாதனை படைத்த...

சூப்பர் ஸ்டாரு சூப்பர் ஸ்டார்தான்யா… ரிலீஸான முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் மெகா வசூல் சாதனை படைத்த ஜெயிலர்…

- Advertisement -

கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதற்காக அதிகாலை முதலே திரையரங்குகளில் கூடிய ரசிகர்கள், பட்டாசுகளை வெடித்தும் மேளதாளங்கள் முழங்க நடனமாடியும் அசத்தினர். தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஜெயிலர் கொண்டாட்டங்கள் களைகட்டின.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். சிலை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்களை போலீஸான வசந்த் ரவி தேட, அதன் பின்னணியில் இருப்பவர்களை சீண்ட வேண்டாம் என்று சில அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் உண்மையைத் தேடிச் செல்லும் அவர் வில்லனால் கொல்லப்பட, தனது மகனை தீர்த்துக் கட்டிய வில்லன் கும்பலை பழிவாங்க கிளம்புகிறார் தந்தை ரஜினிகாந்த். இதன் பிறகு கதையில் நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்களே ஜெயிலர் படத்தை கதைக்களமாக அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற ஜெயிலராக முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்த், ஆரம்பத்தில் மிக சாந்தமாகவும், எதிரிகளை கொலை செய்யும் இடங்களில் மிரட்டல் ஆகவும் நடித்து அசர வைத்திருக்கிறார்.

முதல் பாதியில் ரஜினி யோகி பாபு இடையிலான காமெடி காட்சிகள் வொர்க் அவுட் ஆக, ஆக்சன் காட்சிகளும் தூள் பறக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் இடைவேளையில் ரஜினி கொடுத்த மிரட்டலான நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருந்தாலும், அதனை ஈடுகட்டும் வகையில் அடுத்தடுத்த திருப்புமுனை காட்சிகள் இருப்பதால், ஜெயிலர் நல்ல அனுபவத்தையே கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

படத்தின் இறுதிக் காட்சியில், மோகன்லால், சிவராஜ்குமாரை பயன்படுத்திய விதம் பலரையும் கவர்ந்துள்ளது. ஜெயிலருக்கு பக்கபலமாக அனிருத் இசை இருக்க, நெல்சன் ஒரு ஃபேன் பாய் சம்பவத்தை நடத்தி இருக்கிறார். இதனிடையே படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே, முன்பதிவில் மிகப்பெரிய வசூலை குவித்ததாக சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் முன்பதிவு ஜோராக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டில் ஜெயிலர் திரைப்படம் 29 கோடியே 46 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேறு எந்த ஒரு திரைப்படமும் இதுவரை இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியதே இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக அஜித்தின் துணிவு திரைப்படம்தான் ரிலீஸ் ஆன முதல் நாளில், 24 கோடியே 59 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. தற்போது இந்த சாதனையை ஜெயிலர் திரைப்படம் முறியடித்துள்ளது. மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் வசூலை கணக்கிட்டு பார்த்தால், முதல் நாள் கலெக்ஷன் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்