- Advertisement -
Homeபொழுதுபோக்குதீ பரவட்டும்... சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா திரைப்படத்திலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு... ஆச்சரியத்தில் ரசிகர்கள்...

தீ பரவட்டும்… சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா திரைப்படத்திலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…

- Advertisement -

இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று என இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றி திரைப்படங்களை கொடுத்த சுதா கொங்கரா, அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து இருக்கிறார். இது நடிகருக்கு 25வது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தை முதலில் சூர்யாவுடன் தான் இணைந்து சுதா பணியாற்றுவதாக இருந்தது.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், விஜய் வர்மா மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே இதனை தயாரிக்கவும் முன் வந்தது. படத்திற்கு புறநானூறு என பெயர் வைக்கப்பட்டது.

- Advertisement -

இப்படியான சூழலில் தான் திடீரென ப்ராஜெக்ட் இல் இருந்து இருவரும் பின் வாங்கினார்கள். இதற்கான காரணம் என்ன என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீருக்கு ஆதரவாக சுதா கூறிய கருத்து தான் சூர்யா பின் வாங்குவதற்கான காரணம் என்று சிலர் கூறினார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க புறநானூற்றின் கதையை சிவகார்த்திகேயனிடம் கூறி ஓகே வாங்கினார் சுதா கொங்கரா. அதேபோல் பழைய ப்ராஜெக்ட் இல் உள்ள நடிகர்களை எல்லாம் கலைத்து விட்டு அவர் புதிய நட்சத்திரங்களை தேடினார். இதில் படத்தில் வில்லனாக ஜெயம்ரவி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் அதர்வாவும் படத்தில் இருக்கிறார்.

- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா இதில் கதாநாயகியாக வருகிறார். 1965 ஆம் காலகட்டங்களில் நடப்பது போன்று இந்தத் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. மிக முக்கியமாக இந்தி மொழி திணிப்பை எதிர்ப்பது குறித்து தான் இதன் கதைக்களம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

சென்னையில் விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட சுதா முடிவு செய்துள்ளார். அதன்படி புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் தீ பரவட்டும் என்ற வாசகத்துடன், சிவகார்த்திகேயன் கையில் சோடா பாட்டிலில் தீயை பற்ற வைத்த படி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. நாளை மாலை டீசர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக படத்தின் டைட்டில் பராசக்தி தான் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்