தமிழக முதல்வர் விஜய் திரைப்பட நடிகராக கடைசியாக நடித்த ஜனநாயகன் படம் கடந்த மாதம் 23ம் தேதி வெளியானது. இந்த படம் குறித்து படத்தின் இயக்குனர் எச் வினோத் ஒரு நேர்கோணலில் பேசியிருந்தார். அப்போது ஐந்து மாதங்கள் விஜய் கூடவே இருந்து அவரோடு பழகி பேசி புரிந்து உணர்ந்து எனக்கு தெரியாத ஒரு விஷயத்தை தியேட்டரில் ஒரு படத்தை பார்த்துவிட்டு மக்கள் எல்லாம் எப்படி புரிந்து கொண்டார்கள்?
இவர் தங்களுக்கு நல்லது செய்வார் என்று மக்கள் எப்படி புரிந்து கொண்டார்கள்? இதை நான் ரசிகர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று அந்த நேர்காணலில் படத்தின் இயக்குனர் எச் வினோத் வெளிப்படையாக பேசியிருந்தார். மேலும் விஜய் முதல்வர் ஆவார் என்று நானே எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், இயக்குனர் எச் வினோத் பேசியதை மேற்கோள் காட்டி அவரை விமர்சனம் செய்திருக்கிறார். இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது, மக்களுக்கு இவர் நல்லது செய்வார் என்று சொல்வதற்கு இதுவரை ஜோசப் விஜயாக அவர் என்ன பேசி இருக்கிறார்?
இதுவரை விஜய் நமக்கு ஒரு நடிகராக தானே தெரியும்? திரையில் அவர் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு முகமூடி. அப்படி பிடித்துப்போன ஒரு நடிகரை அரசியலைப் பற்றியோ மக்களைப் பற்றிய யோசிக்காமல் ஸ்டைலாக இருக்கிறார் அழகாக இருக்கிறார் என நினைத்து வாக்களிப்பவர்களை எப்படி நல்ல மக்களாக ஏற்றுக் கொள்வது?
இதற்காக நான் மக்களை தர குறைவாக பேசவில்லை. வாக்காளர்கள் என்ற பார்வையில் சொல்கிறேன். ரசிகர்கள் பித்து பிடித்து போய் வாக்களித்து அவரை முதலமைச்சர் ஆக்கி இருக்கிறார்கள். அதற்காக 80 சதவீதம் பேர் அவரை எதிர்ப்பவர்கள் உள்ளனர்.
அப்படிப்பட்ட ஒருவரை எப்படி முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியும்? இதில் நாங்கள் கன்வின்ஸ் ஆகவே இல்லை. விஜய்க்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்று அந்த நேர்காணலில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரசாரமாக பேசியிருக்கிறார்.





