- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்க கையில் எதுவும் இல்லே… எல்லாமே அவங்க முடிவுதான் - அப்செட் ஆன கேவிஎன் புரடக்சன்ஸ்...

எங்க கையில் எதுவும் இல்லே… எல்லாமே அவங்க முடிவுதான் – அப்செட் ஆன கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம், ஜனநாயகன் நிலமை இப்படியா ஆவணும்?

- Advertisement -

கடந்த பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 9ம் தேதி நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சனையில் சிக்கிய இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கிடையே சென்னை உயர்நீதி மன்றம் முதல் டெல்லி உச்ச நீதிமன்றம் வரை போய் போராடியும் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை.

ஒரு கட்டத்துக்கு பிறகு சென்சார் என்ன சொன்னாலும் செய்கிறோம் என்ற நிலைக்கு ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒத்துக்கொண்டு வழக்கையும் வாபஸ் பெற்றுவிட்டது. எனினும் ஜனநாயகன் படம் ரிலீஸ்க்கான எந்த அறிகுறியும் இதுவரை காணப்படவில்லை.

- Advertisement -

ஜனநாயகன் படம் எப்போது திரைக்கு வரும் என்று காத்திருந்த தளபதி ரசிகர்களும் இப்போது அமைதியாகி விட்டனர். ரசிகர்களின் மத்தியில் இருந்த ஆர்வமும் அப்படியே காணாமல் போய்விட்டது. எப்படி பார்த்தாலும் ஜனநாயகன் படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆகி திரைக்கு வராது என்ற முடிவுக்கு ரசிகர்களே வந்து விட்டனர்.

இந்நிலையில் மும்பையில் உள்ள சென்சார் ரீவைசிங் கமிட்டி இன்னும் ஜனநாயகன் படத்தை பார்க்கவில்லை. அதற்கான தேதியும் பிக்ஸ் செய்யவில்லை. இதுகுறித்து படத்தை தயாரித்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னையில் உள்ள சென்சார் போர்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.

- Advertisement -

அப்போது, சென்னை சென்சார் போர்டு அலுவலகத்தை பொருத்த வரை படம் பார்த்து சான்றிதழ் தரும் அதிகாரம்தான் எங்களுக்கு உள்ளது. ரீவைசிங் கமிட்டி படம் பார்ப்பது அதுகுறித்து முடிவு செய்வது மும்பை சென்சார் அலுவலகம்தான்.

அதனால் ரீவைசிங் கமிட்டி படம் பார்ப்பதாக மும்பையில் இருந்து எங்களுக்கு தகவல் அனுப்பினால் நாங்கள் அந்த தகவலை உங்களுக்கு தெரிவிப்போம். மற்றபடி மும்பை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் ரீவைசிங் கமிட்டி இருப்பதால் இந்த விஷயத்தில் நாங்கள் எதுவுமே செய்ய முடியாது என்று சென்னை சென்சார் போர்டு அதிகாரிகள் கைவிரித்து விட்டதாக தகவல் கசிந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்