நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. இதுவே அவரது கடைசி படம் என்பதால் தளபதி ரசிகர்கள் இந்த படத்தை முதல் நாளிலேயே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் காத்திருக்கின்றனர். இதிலும் பலர் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் ஆர்வத்தில் டிக்கெட் முன்பதிவை செய்து வருகின்றனர்.
எச் வினோத் ஏற்கனவே பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர். குறிப்பாக தீரன் அதிகாரம் 1 சதுரங்கவேட்டை துணிவு வலிமை என அவரது படங்கள் நல்ல திரைக்கதை அம்சத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நல்ல படைப்புகளாக இருந்தன. அதே போல் ஜனநாயகன் படமும் பட்டைய கிளப்பும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
வழக்கமாக தமிழ்நாட்டில் புதிய படங்கள் ரிலீஸான போது அதிகாலை 4 மணி காட்சி இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காலை 9 மணிக்கு தான் முதல் காட்சியே அனுமதிக்கப்படுகிறது. சில அசம்பாவித சம்பவங்கள் நடந்தததால் தமிழக அரசு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு சில ஆண்டுகளாக அனுமதி தருவதில்லை.
ஆனால் தமிழகத்துக்கு அருகில் உள்ள ஆந்திரா கர்நாடகா கேரளா மாநிலங்களில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்களில் அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. அதனால் தமிழ்நாட்டில் உள்ள தளபதி ரசிகர்கள், காலை 9 மணி வரை காத்திருக்க பொறுமை இல்லை.
அதனால் அருகில் உள்ள கேரளா பாலக்காடு, பெங்களூரு ஆந்திரா போன்ற ஊர்களுக்கு முன்பே சென்று அதிகாலை 4 மணிக்கு ரஜினி கமல் விஜய் அஜீத் குமார் போன்ற நட்சத்திர நடிகர்களின் ரிலீஸ் படங்களை முன்னதாகவே பார்த்து விடுவது வழக்கமாக உள்ளது. அப்படிதான் இந்த முறையும் ஜனநாயகன் படத்தை அதிகாலை 4 மணி காட்சியை பார்க்க ஆர்வமாக இருந்தனர்.
ஆனால் இப்போது வெளியான தகவலின்படி தமிழ்நாட்டில் ஜனநாயகன் படம் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் துவங்குகிறது. மேலும் கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கு தான் முதல் காட்சி துவங்கும். அதிகாலை 4 மணி காட்சி இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தளபதி ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது.





