- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை பக்காவாக பிளான் செய்த இயக்குனர் எச் வினோத், நடிகர் விஜய் அதற்கு கொஞ்சம்...

ஜனநாயகன் படத்தை பக்காவாக பிளான் செய்த இயக்குனர் எச் வினோத், நடிகர் விஜய் அதற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குவாரா? – காத்திருக்கும் படக்குழு!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இன்றைய சூழலில் தமிழ் படங்களின் வசூல் சக்கரவர்த்தி என்றால் அது நடிகர் விஜய்தான். கடந்தாண்டில் கூட விஜய் நடித்த தி கோட் படம்தான் ரூ. 445 கோடி வசூலித்து தமிழ் படங்களில் அதிக வசூல் சாதனை படைத்து முதலிடம் பெற்றது. தோல்வி படங்களில் கூட கணிசமான லாபத்தை தயாரிப்பாளருக்கு தருபவர் நடிகர் விஜய் மட்டுமே.

ஆனால் இனி அதற்கான வாய்ப்பு தமிழ் சினிமாவில் இருக்காது. ஏனெனில் ஜனநாயகன் படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தின் தலைவராக முழுநேர அரசியலில் தீவிரம் காட்ட இருக்கிறார். அதனால் இனி அரசியல்வாதியாக மட்டுமே விஜயை பார்க்க முடியும்.

- Advertisement -

வருகிற 30ம் தேதி கல்வி விருது வழங்கும் விழா 3வது ஆண்டாக நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு நடிகர் விஜய் ரொக்கப் பரிசு வழங்கி கல்வி விருது சான்றிதழ் வழங்கி வருகிறார்.

இந்த முறை 3 நாட்களுக்கு இந்த விழாவை நடத்த உள்ளனர். வருகிற 30ம் தேதி 68 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியருக்கு கல்வி விருதுடன் ரொக்கப் பரிசுகளை நடிகர் விஜய் வழங்க உள்ளார். அடுத்து மீண்டும் 2 நாட்களை ஒதுக்கி மற்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசுடன் விருதுகளை விஜய் வழங்க உள்ளார். அந்த தேதிகளும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் 99 சதவீதம் முடிந்து விட்டது. இதுவரை எடுத்த படத்தை முழுமையாக எடிட்டிங் செய்து பக்காவாக ஒரு திரைப்படம் போலவே ஆர்ஆர் எல்லாம் போட்டு தயார் செய்திருக்கிறார் இயக்குனர் எச் வினோத். சமீபத்தில் ஜனநாயகன் படத்தை பார்த்த படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எச் வினோத் பெரிய அளவில் திருப்தி அடைந்திருக்கின்றனர்.

இதனால் படத்தின் ரீ ஷூட் மற்றும் பேட்ச் ஒர்க் பணிகள் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது. படக்குழுவினர் பார்த்து பரம திருப்தி அடைந்த நிலையில் இன்னும் ஜனநாயகன் படத்தை விஜய் பார்க்கவில்லை. அவர் நேரம் ஒதுக்கி தந்தால் படத்தை அவரிடம் காட்ட இயக்குனர் எச் வினோத் தயாராக இருக்கிறார். அவரும் ஒருமுறை பார்த்து விட்டால் அடுத்த போஸ்ட் புரடக்சன் பணிகளை எச் வினோத் துவங்கி விடுவார். ஜனநாயகன் படம் பார்க்க விஜய் நேரம் ஒதுக்குவதற்காக எச் வினோத் காத்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்