- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல், விரைவில் திரையில் ரசிகர்களை சந்திக்க வரும் தளபதி!

ஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல், விரைவில் திரையில் ரசிகர்களை சந்திக்க வரும் தளபதி!

- Advertisement -

தமிழ் சினிமா வட்டாரத்தில் சமீபத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதுதான். தியேட்டருக்கு இந்த படம் எப்போது வரும் என்று விஜய் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரிய அதிர்வலைகளை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியது.

இந்த சூழலில் திருப்பூரை அடுத்துள்ள கருமத்தம்பட்டியில் உள்ளூர் கேபிள் டிவி சேனலில் ஜனநாயகன் படத்தை அப்படியே வெளியிட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். டிவி சேனலில் ஏராளமானோர் ஜனநாயகன் படத்தை பார்த்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

- Advertisement -

அத்துடன் மலேசியாவில் ஜனநாயகன் படத்தில் டிவிடி கேசட்டுகளில் பதிவு செய்து அழகான பேக்கிங் விற்பனை நடந்துள்ளது. இதை ரசிகர்கள் பலரும் வாங்கி சென்று பார்த்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு உச்ச நடிகர் படம் முதன் முறையாக இப்படி இணையத்தில் வெளியாகி மக்களிடம் எளிதாக சென்றடைந்தது இதுதான் முதல் சம்பவமாக உள்ளது.

இந்நிலையில் இனியும் படத்தை வெளியீடு செய்வதில் தாமதம் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் முன்வந்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 30ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் என்கிற முக்கிய முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

- Advertisement -

இதற்கிடையே ஜனநாயகன் படம் இப்படி இணையத்தில் வெளியானதால் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக நடிகர் விஜய் மீண்டும் அவர்கள் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படம் தளபதி 70 படமாக இருக்கும் என்றும் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியான போதும் விஜய் ரசிகர்கள் யாரும் அந்த படத்தை பார்க்க அதிக ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை. மேலும் அந்த படத்தை டவுன்லோடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் தியேட்டர்களில் ஜனநாயகன் படத்துக்கு வழக்கமான வரவேற்பும் ஆதரவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்