நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாக படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். தி கோட் என சுருக்கமான டைட்டிலில் அழைக்கப்பட்ட இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. வசூல் ரீதியாக படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு லாபத்தையே கொடுத்தது.
இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவே நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் படத்தில் பிரகாஷ் ராஜ் பாபி தியோல் நரேன் பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது.
கடந்த அக்டோபரில் துவங்கிய ஜனநாயகன் படப்பிடிப்பு 6 மாதங்கள் கடந்தும் இன்னும் படப்பிடிப்பு முடிவுக்கு வரவில்லை. இன்னும் 2 மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பு நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு நீண்ட காலம் படப்பிடிப்பு என்பது இயக்குனர் எச் வினோத்துக்கு பெரிய விரக்தியை ஏற்புடுத்தி வருகிறது.
ஏனெனில் அவர் இதற்கு முன் இயக்கிய சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு போன்ற படங்களை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் எடுத்து முடித்தவர். ஆனால் ஜனநாயகன் படப்பிடிப்பு 4 மாதங்களுக்கு மேல் முடிவடையாமல் 8 மாதங்கள் வரை நீடிப்பது இயக்குனர் எச் வினோத்துக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் நடிகர் விஜய்தான் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் நடிகர் விஜய் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல ஜனநாயகன் படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்கிறார். அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார். இப்போது ஒரு வாரம் பிரேக் விட்டுவிட்டு தவெக கட்சி நடத்தும் பூத் கமிட்டி கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இப்படி அடிக்கடி விஜய் பிரேக் விடுவதால்தான், ஜனநாயகன் படப்பிடிப்பு தடைபடுவதும் தாமதம் தொடர்வதாகவும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.





