நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் அவரது 69வது படம். தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த போது நடிகர் விஜய் தி கோட் என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போதே தி கோட் படத்துக்கு பிறகு ஒரு படத்தில் நடிப்பேன். அதுதான் என்னுடைய கடைசி படம் என்று உறுதியாக கூறியிருந்தார்.
அதன்படி இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாளுக்குள் சென்சார் சான்று கிடைக்காததால் படம் ரிலீஸ் ஆகவில்லை. பலகட்ட போராட்டங்களுக்கு பிறகும் இன்று வரை ஜனநாயகன் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
இப்போது நடிகர் விஜய் தமிழக முதல்வராகி விட்டார். அதனால் மிக விரைவில் ஜனநாயகன் படம் திரைக்கு வரும் என்பது உறுதியாகி விட்டது. இந்த படத்தை முதலில் ஓடிடி உரிமம் பெற்ற அமேசான் பிரைம் நிறுவனம், படம் ரிலீஸாக தாமதம் ஆனதால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
ஆனால் இப்போது அமேசான் பிரைம் உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்கள் ஜனநாயகன் படத்தை வாங்க போட்டி போடுகின்றன. ஏனெனில் தமிழக முதல்வராக விஜய் இப்போது பதவியேற்ற நிலையில் ஜனநாயகன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்பதால் படத்தை அதிக விலை கொடுத்து வாங்க ஓடிடி நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
இந்நிலையில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 18ம் தேதி ஜனநாயகன் ரிலீஸாகிறது. இதற்கிடையே படத்தின் டைட்டில் கார்டில் தமிழக முதலமைச்சர் விஜய் என்று போட வேண்டும் என்று தமிழக மக்கள் மத்தியிலும் குறிப்பாக தவெக கட்சியினர் மத்தியிலும் ஒரு கோரிக்கை இருந்து வருகிறது. படம் ரிலீஸ் ஆகாத போதே, தேர்தலுக்கு பிறகு படம் ரிலீஸ் ஆனால் தமிழக முதல்வர் விஜய் என டைட்டில் கார்டில் வரும் என்று தளபதி ரசிகர்கள் கூறியிருந்தனர்.
அதே போல் இப்போது விஜய் தமிழக முதல்வராக உள்ள நிலையில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதால் அப்படியே டைட்டில் கார்டில் வர வேண்டும் என்று விரும்புகின்றனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் முதல்வர் விஜயிடம் கேட்டுள்ளனர். அதற்கு விஜய், ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்டில் தளபதி விஜய் என்று மட்டும் போடுங்கள். முதல்வர் விஜய் என போட வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார் என்கிற தகவல் இப்போது வௌியாகி உள்ளது.





