கடந்தாண்டில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் ரூ. 445 கோடி ரூபாய் வசூலித்து 2024ம் ஆண்டில் அதிக வசூல் செய்த முதல் படமாக இருந்தது. இப்போது விஜய் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்திருக்கிறார்.
கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாகவும் பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்கள் கடந்த 26ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியானது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தலைவராக உள்ள நடிகர் விஜய், இந்த படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.
விஜய் நடித்துவரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரலுக்குள் முடிவடைய உள்ளது. அதன்பிறகு போஸ்ட் புரடக்சன் பணிகள் நடக்க உள்ளது. வருகிற அக்டோபார் மாதத்தில் தீபாவளி அல்லது ஆயுத பூஜைக்கு இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது.
ஆனால் தீபாவளி போல பண்டிகை காலத்தில் வந்தால் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறும். ஆனால் அரசியல்வாதியாக உள்ள தனக்கு இந்த படத்தின் மூலம் அரசியல் ஆதாயமும் கிடைக்க வேண்டும். மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவதன் மூலம், ஆதரவை பெற முடியும் என்று விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதற்காகவே படத்தில் ஆங்காங்கே அரசியல் சார்ந்த விஷயங்களையும் தூவி விட்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனநாயகன் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய விஜய் உள்ளிட்ட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு வார காலம் பொங்கல் பண்டிகை வசூலும் படத்துக்கு பலமடங்கு பெருகும் என்பதும் முக்கிய விஷயமாக உள்ளது.





