- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் திரைக்கு வரும் சின்ன தளபதி, தந்தையின் இடத்தை மகன் நிரப்புவாரா? - தமிழ் சினிமாவில்...

விரைவில் திரைக்கு வரும் சின்ன தளபதி, தந்தையின் இடத்தை மகன் நிரப்புவாரா? – தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஜேசன் சஞ்சய் விரைவில் அறிமுகம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் புரட்சி இயக்குனர் என்ற பட்டத்துடன் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்ஏ சந்திரசேகர். அவர் தனது மகன் விஜயை டாக்டர் ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரது மகன் விஜய் சினிமாவில் ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்பியதால் நாளைய தீர்ப்பு படம் மூலம் அவரை சினிமாவில் அறிமுகம் செய்தார்.

அதன் பிறகு நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்து உச்ச நடிகராக மாறினார். ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று இப்போது பவனி வருகிறார். இந்த சூழ்நிலையில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போல் சினிமாவில் நடிக்க விரும்பாமல் திரைப்பட இயக்குனராகி சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

- Advertisement -

அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அவர் தன் தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல தொடர்ந்து திரைப்பட இயக்குனராக பல படங்களை தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இப்போது அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தமிழ் குமரன் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஜேசன் சஞ்சய் தற்போது கமிட்டாகி இருக்கிறார்.

அந்தப் படத்தின் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக விரைவில் அறிமுகமாவது உறுதியாகி விட்டது. ஏற்கனவே நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் விட்டுச் சென்ற உச்ச நட்சத்திர இடத்தை பிடிக்க போவது யார் என்று தமிழ் சினிமாவில் கடும் போட்டி நிலவுகிறது.

- Advertisement -

தற்போது இந்த சூழலில் நடிகர் விஜய் விட்டுச் சென்ற இடத்தை அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகி மிக விரைவில் பிடிப்பாரா என்ற பெரிய ஆர்வம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஜேசன் சஞ்சய் சினிமாவில் நடிப்பதற்கான ஒரு இளம் கதாநாயகனுக்கு உரிய தோற்றத்தில் கம்பீரமாக அழகாக காணப்படுகிறார். நிச்சயமாக ரசிகர்களின் மனதில் அவர் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

அதே நேரத்தில் அவரது அப்பா விஜய் போல இவரும் ஆக்சன் ஹீரோவாக காதல் ஹீரோவாக தமிழ் சினிமாவில் சில ஆண்டுகள் வலம் வருவார் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் இயக்குனராகவும் அவர் அவ்வப்போது படங்களை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எப்படி இருப்பினும் எஸ் ஏ சந்திரசேகர் விஜய் ஆகியோரை தொடர்ந்து மீண்டும் ஒரு இளம் நடிகர் எஸ்ஏசி குடும்பத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்