தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி, மிகச்சிறந்த நடிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர். குறிப்பாக அவரது அண்ணன் ராஜா மோகன் இயக்கத்தில் அவர் நடித்த முதல் படம் ஜெயம். இந்த படத்தில் சதா நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுத்தது.
அதைத் தொடர்ந்து, 2வது படமாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் நதியாவின் மகனாக ஜெயம் ரவி நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இதில் கிக் பாக்ஸராக ஆக்சன் ஹீரோ கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இதில் பிரகாஷ்ராஜ் நடிப்பு சிறப்பாக இருந்தது. நாயகியாக அசின் நடித்து, தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்கப்பட்டார். மலையாள பெண்ணாக கவர்ச்சியாக அழகில் ரசிகர்களை வசீகரித்தார். இந்த படமும் மெகா ஹிட் படமாக அமைந்தது.
அதன் பிறகு ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன், போகன், வனமகன், பேராண்மை, சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும், மிருதன், அடங்க மறு, நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்கள், ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்து, அவர் முன்னணி கதாநாயகனாக வெளிப்படுத்தியது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில், அருண்மொழி வர்மன் கேரக்டரில், ஜெயம்ரவி நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.
ஆனால் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த அகிலன், இறைவன், இப்போது சமீபத்தில் வெளியான சைரன் 108 என அனைத்து படங்களுமே அவருக்கு தோல்வியை கொடுத்து வருகிறது. இது சினிமா வட்டாரத்தில் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் டைரக்ட் செய்துள்ள காதலிக்க நேரமில்லை என்ற படத்தையும், அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள சீனி என்ற படத்தையும்தான் ஜெயம் ரவி மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறார்.
ஜெயம் ரவி மட்டுமின்றி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் இந்த படத்துக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளது. அக்கா மகனை ஹீரோவாக வைத்து எடுத்த ஜோஸ்வா படத்தால், 15 கோடி ரூபாய் நஷ்டம் வேல்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டது. இதையடுத்து சின்ன பட்ஜெட் படங்களே பண்ணக்கூடாது. பெரிய பட்ஜெட் படங்கள் தான் பண்ண வேண்டும் என்று வேல்ஸ் நிறுவனம் முடிவு செய்தது.
இதையடுத்து, ஜெயம் ரவி நடிக்கும் சீனி படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்த படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று கூறப்படுகிறது இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படத்தை ஆகஸ்ட், செப்டம்டர் மாதத்தில் சோலோவாக படத்தை வெளியிட வேண்டும் என்று முடிவில் தீவிரமாக இருந்து வருகிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.





