- Advertisement -
Homeபொழுதுபோக்குகமலை பார்த்து ஒரு கிலோமீட்டர் ஓடிய ஜெயம் ரவி.. காரணம் என்ன தெரியுமா?.. இதெல்லாம்...

கமலை பார்த்து ஒரு கிலோமீட்டர் ஓடிய ஜெயம் ரவி.. காரணம் என்ன தெரியுமா?.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் பாஸ்

- Advertisement -

கமல் ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் ஏதேனும் ஒரு பரிசோதனை முயற்சியை செய்துகொண்டே இருப்பவர். இடையில் அரசியலுக்கு சென்ற அவர் அங்கு தன்னால் நினைத்தபடி ஜொலிக்க முடியவில்லை. இதனையடுத்து மீண்டும் தன்னுடைய சினிமா கோட்டைக்குள் நுழைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்தார்.

அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு பிறகு வினோத் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படம் வெளியாகவிருக்கிறது. கமல் ஹாசனின் பிறந்தநாளையொட்டி நேற்று மாலைதான் கமல் – மணிரத்னம் இணையும் படத்தின் பெயர் தக் லைஃப் என்று அறிவிக்கப்பட்டு வீடியோ வெளியிடப்பட்டது.

- Advertisement -

படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் தோன்றுகிறார். எதற்காக கமல் ஹாசன் தன்னுடைய கதாபாத்திர பெயரில் சாதி பெயரை பயன்படுத்த வேண்டும் என்றும் சர்ச்சை எழுந்திருக்கிறது. அதேபோல் ரைஸ் ஃபார் ஸ்கைவாக்கர் என்ற ஹாலிவுட் படத்திலிருந்து தக் லைஃப் இன்ட்ரோ வீடீயோ உருவப்பட்டிருப்பதாகவும் ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இதற்கிடையே இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பும் நேற்று வெளியானது. அதன்படி துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் இதுவரை கமிட்டாகியிருக்கின்றனர். நடிகை நயன் தாராவும் இதில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி கமல் ஹாசன் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது.

- Advertisement -

அவர் அளித்த பேட்டியில், “கமல் ஹாசனின் ஆளவந்தான் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். ஆனால் அது அவருக்கே தெரியாது. ஆளவந்தான் படத்தின் செட்டுக்குள் கமல் சார் வந்தார் என்றால் நான் பதற்றமடைந்து ஒரு கிலோமீட்டர் ஓடிவிடுவேன். அந்த அளவுக்கு அவரது சின்சியாரிட்டி என்னை பிரமிக்க வைக்கும். நான் அவருடேனேயே இருக்க வேண்டும். அவர் முன்னிலையில் ஒரு விருதினையாவது வாங்கிவிட வேண்டும் என்றுதான் கனவு கண்டேன். நான் ஒரு நடிகனாக வளர்ந்ததற்கு 85 சதவீதம் கமல் ஹாசன் காரணம் 15 சதவீதம் எனது தந்தை காரணம்” என்றார்.

- Advertisement -

சற்று முன்