நடிகர் ஜெயம் ரவி, எடிட்டர் மோகனின் மகன். இயக்குனர் மோகன் ராஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயம் ரவிக்கு, முதல் படமே மிகப்பெரிய அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. அப்பாவித்தனமான அவரது கல்லூரி மாணவன் நடிப்பு, ரசிகர்களை ஈர்த்தது.
தொடர்ந்து அடுத்த படமான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஆக்சன் ஹீரோவாக அசத்தினார். இந்த படத்தில் நதியா அம்மாவாகவும், பிரகாஷ் ராஜ் அப்பாவாகவும், ஜோடியாக அசினும் நடித்திருந்தனர். நண்பராக விவேக்கும் நடித்திருந்தார், இந்த படத்தில் பாக்ஸிங் வீரர் கேரக்டரில் ஜெயம் ரவி அதிரடி நாயகனாக அசத்தினார்.
தொடர்ந்து தனி ஒருவன் படம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். தனிஒருவன் 2ம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் இன்றுவரை காத்திருக்கும் அளவுக்கு இந்த முதல் பாகம், மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த படமாக இருந்தது. இதில் நயன்தாரா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து முன்னணி நாயகனாக மாறி வனமகன், பேராண்மை, பொன்னியின் செல்வன் என நல்ல படங்களில் நல்ல கேரக்டர்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, கடந்த 2009ம் ஆண்டில், தனது கல்லூரி தோழியான ஆர்த்தியை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். டிவி சீரியல், சினிமா தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள்தான் ஆர்த்தி. பூமி, அடங்கமறு, சைரன் போன்ற ஜெயம் ரவி படங்களை தயாரித்தவர் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா தான்.
இந்நிலையில், சில தினங்களாக ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் பிரிந்து இருப்பதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அதே போல், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த கணவர் மற்றும் பிள்ளைகளின் புகைப்படங்களை எல்லாம் நீக்கி விட்டார் என்ற தகவலும் வெளியாகி, அவர்களது பிரிவை உறுதிப்படுத்தியது.
இதற்கிடையே ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவுக்கு காரணம், சுஜாதா விஜயகுமாரின் வளர்ப்பு மகன் சங்கர் என்ற தகவல் இப்போது பரவி வருகிறது. சுஜாதா விஜயகுமார் ஜெயம் ரவி நடித்த படங்களை தயாரித்த நிலையில், புரடக்சன் பணிகளை வளர்ப்பு மகன் சங்கர் தான் கவனித்துள்ளார். அதனால் ஜெயம் ரவிக்கும், மாமியாருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆர்த்தியும் தன் தாயாருக்கு ஆதரவாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகமாக அவர்களது உறவில் விரிசலை ஏற்படுத்திய நிலையில், இப்போது ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் பிரிவுக்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.





