நடிகர் சூரி, துவக்கத்தில் துணை நடிகராக இருந்து பிறகு காமெடி நடிகராக முன்னுக்கு வந்தார். அவரது காமெடி நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதால், சில ஆண்டுகளிலேயே முன்னணி காமெடி நடிகராக சூரி உயர்ந்தார். ரஜினி, விஜய், அஜீத், விஷால், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் காமெடி கூட்டணி அமைத்து பெரிய அளவில் பிரபலமானார்.
குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம் கொத்திப் பறவை, சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் நடித்த வகையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மருது, கத்திச்சண்ட, பாண்டியநாடு உள்ளிட்ட படங்களில் விஷாலுடன் நடித்த வகையிலும், நல்ல இமேஜ் கிடைத்தது.
நடிகர் சூரி காமெடி நடிப்பில் இருந்து, ஹீரோவாக மாறிய படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படத்தில் நடித்த பிறகு, சூரியின் இமேஜ் வேற லெவலில் உயர்ந்தது. அதன்பிறகு இப்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கருடன் படமும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்து சூரி நடிப்பில் கொட்டுக்காளி படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூரி ஒரு படத்தில் நடிக்க ரூ. 8 கோடி வரை சம்பளம் பெறுகிறார். கருடன் படத்தில் நடித்த வகையில் சூரிக்கு ரூ. 8 கோடி சம்பளமும், சசிக்குமாருக்கு ரூ. 2 கோடி சம்பளமும் பெற்றுள்ளனர். இதே சூரி, சுந்தரபாண்டியன் படத்தில் சசிக்குமாருடன் நடித்த போது, காமெடி நடிகராக இருந்தது குறிப்பிடத்தக்கது. கருடன் படத்தில் நடிக்க சசிக்குமார் கதையே கேட்காமல், தம்பி சூரி நடிக்கிறான். அவனுக்காக நான் நடிக்கிறேன் என, சம்மதம் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே நடிகர் சூரி மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் மெஸ் என்ற பெயரில் ஓட்டல்களை நடத்தி வருகிறார். இந்த ஓட்டல்களை தொடர்ந்து அவர் பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்தி வருகிறார். நடிகர் சூரி ஓட்டல் என்ற ஆர்வத்தில் சினிமா ரசிகர்களும், பொதுமக்களும் அதிகளவில் அவரது ஓட்டலுக்கு சென்று சாப்பிடுகின்றனர். நிரந்தர வாடிக்கையாளர்களாகவும் மாறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூரி நடத்தும் ஓட்டல்களின் உரிமையாளர்களாக அவரது குடும்பத்தினர் பெயர் இருந்தாலும், உண்மையில் அதன் உரிமையாளர் நடிகர் சூரிதான். அதே நேரத்தில், அந்த ஓட்டல்களில் பங்குதாரராக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், கணிசமான பங்கை முதலீடு செய்திருக்கிறார். மேலும் பிளாக்ஷிப் என்ற சேனலுக்கு ரூ. 1 கோடி ஆரம்பத்தில் முதலீடு செய்து, சில ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 50 கோடி ஷேர் எடுத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். பிஸினஸ் விஷயத்தில் சிவகார்த்திகேயன் பயங்கர கில்லாடி என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.





