- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயம் ரவி நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகும் பிரதர், அக்கா தம்பி பாசத்தை சொல்லும் இந்த...

ஜெயம் ரவி நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகும் பிரதர், அக்கா தம்பி பாசத்தை சொல்லும் இந்த படத்தின் கதைச்சுருக்கம் இதுதான் – மொத்த கதையையும் உளறிக் கொட்டிய இயக்குனர்

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. அவரது நடிப்பில் வரும் தீபாவளிக்கு பிரதர் படம் ரிலீஸ் ஆகிறது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள பிரதர் படத்தில் ஜெயம் ரவி நாயகனாகவும், பிரியங்கா மோகன், நாயகியாகவும் நடித்துள்ளார்.
இந்த படத்தில் பூமிகா, நட்டி, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், அச்யுத், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களின் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சிவா மனசுல சக்தி இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கி உள்ளார். படத்துகு்கு ஹாரீஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜேஷூம், இசையமைப்பாளர் ஹாரீஷ் ஜெயராஜூம் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். வரும் 31ம் தேதி தீபாவளிக்கு பிரதர் படம் ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

படத்தின் இயக்குனர் ராஜேஷ் சமீபத்தில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் பிரதர் படம் குறித்து கூறியதாவது, இந்த படத்தில் கார்த்திக் என்ற கேரக்டரில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இவர் செய்யும் விஷயங்கள் பலவும் வீட்டுக்குள் பிரச்னையாக வந்து அந்த குடும்பத்திற்கு தலைவலியாக மாறுகிறது. கார்த்தியால் அவரது பெற்றோர் மிகவும் கவலைப்படுகின்றனர்.

ஆனால் அவரது அக்கா பூமிகா, தன் தம்பி ஜெயம் ரவியை எப்போதுமே குழந்தையாகவே பார்க்கிறார். அன்பு காட்டுகிறார். இதனால் யாருக்கும் அடங்காமல் இருக்கும் கார்த்திக், தனது அக்காவின் அன்புக்கு கட்டுப்பட்டு பணிந்து நடந்து கொள்கிறான். அக்காவை திருமணம் செய்து கொடுத்தும், அக்காவை பிரிய மனமில்லாமல், அக்கா வீட்டுக்கே வந்து விடுகிறான்.

- Advertisement -

ஆனால் கார்த்தியால் தனது சகோதரியின் வீட்டில் இருக்க முடியவில்லை. அதீத ஒழுக்கமும், கட்டுப்பாடுகளும் கொண்ட ஒரு கட்டுப்பாடான குடும்பத்தில் அவனால் இருக்க முடியவில்லை. எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்யும் அந்த வீட்டுக்குள் இருக்க முடியாமல் கார்த்திக் திண்டாடுகிறான். அவனது குழப்பமான சூழலுக்கும், அவன் வளர்ந்த விதத்திற்கும் புறம்பாக உள்ள அக்காவின் புகுந்த வீட்டில் எப்படி அவனால் வாழ முடிகிறதா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.

தமிழ் சினிமாவில் அக்கா தம்பி இருவருக்கும் இடையிலான உறவை பேசும் பல படங்கள் இதுவரை வந்துள்ளன. ஆனால் இந்த படம் இன்றைய தலைமுறைக்கான அக்கா தம்பி படமாக இருக்கும். இந்த தலைமுறையில் அக்கா தம்பி எப்படி வாழ்கிறார்கள், எப்படி பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள் என்பதை இந்த படமாக தந்துள்ளேன். அக்கா தம்பியுடைய பந்தத்தை ஒரு கூட்டு குடும்ப பின்னணியில் இந்த படத்தை கூறி இருக்கிறேன் என்று படத்தின் இயக்குனர் எம். ராஜேஷ் கூறியிருக்கிறார். மொத்த கதையையும் இப்படி சொல்லிட்டா, படம் பார்க்கறப்போ எப்படி சுவாரசியமாக இருக்கும் என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்