இயக்குனர் மணிரத்னம் தற்போது தக் லைப் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் நாயகன் திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவில் கிளாசிக்கான திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் நாயகன் என்று கூறலாம். இந்த திரைப்படத்திற்காக கமல்ஹாசன் தேசிய விருதை பெற்றார்.
படம் முழுக்க வேலு நாயக்கராக வாழ்ந்து நம்மை பிரமிக்க வைத்தார் கமல்ஹாசன். இந்த நிலையில், 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோ ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.
அதில் தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று அறிமுகப்படுத்துவார் கமல்ஹாசன். படத்திலும் அவர் நெல்லை தமிழில் பேசியது கவனிக்க வைத்தது. இதில் கமல்ஹாசன் உடன், திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட ஏராளமான நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கால் ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் படத்திலிருந்து விலகினர். இவர்களுக்கு பதிலாக சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனது வேலைகளை விறுவிறுப்பாக்கி இருக்கிறார் மணிரத்னம். சமீபத்தில் டெல்லியில் இதன் சூட்டிங் பணிகள் நடைபெற்றது.
தொடர்ந்து புதுச்சேரி விமான நிலையத்தில் படப்பிடிப்பை மணிரத்னம் நடத்தினார். அங்கு, கிளைமேக்ஸ் முந்தைய சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் கமல்ஹாசன் சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடித்ததாக தகவல் வெளியானது. கிட்டத்தட்ட 60% படப்பிடிப்பை மணிரத்னம் முடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் நடைபெற்ற சூட்டின் போது ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் காட்சியில், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜிக்கு காலில் அடிபட்டுள்ளது. அவர் தவறி விழுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜார்ஜ் பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் காலில் காயத்துடன் தனக்கான காட்சிகளை ஜோ ஜூ ஜார்ஜ் நடித்து முடித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில், தக் லைப் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





