- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை திரிஷாவிடம் காட்டிய நெருக்கத்தால் விஜய் பெயர் டேமேஜ் ஆகி விட்டது, இனி யாராலும்...

நடிகை திரிஷாவிடம் காட்டிய நெருக்கத்தால் விஜய் பெயர் டேமேஜ் ஆகி விட்டது, இனி யாராலும் முட்டுக்கொடுக்க முடியாது – விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

நடிகராக இருந்த விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார். அவருக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்து வரும் நிலையில் இதுவரை எந்த கட்சியிலும் விஜய் கூட்டணி வைக்கவில்லை. இதற்கிடையே நடிகை திரிஷாவுடன் அவர் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

குறிப்பாக சென்னையில் நடந்த திருமண வரவேற்பு விழாவுக்கு விஜய் திரிஷா இருவரும் ஒரே மாதிரியான நிறத்தில் உடை அணிந்து ஒரே காரில் வந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு சென்றுள்ள இந்த நிலையில் திரிஷாவுடன் விஜய் காட்டும் நெருக்கம் இன்னும் அவரது தலைவர் இமேஜை சிதைத்து வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் ஒரு நேர்காணலில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்போது அந்தணன் கூறியதாவது, விஜய் எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களே விஜய் இறுதியில் கூட்டணி வைத்தது நடிகை திரிஷாவுடன் தான் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

இதனால் விஜயை சுற்றி உருவாகியுள்ள அரசியல் இமேஜ் கடும் பாதிப்பை சந்திக்கும். விஜய் நடித்த வாரிசு போன்ற சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அந்த படங்களுக்கு எதிராக நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. நடிகர் விஜய் குறித்த பல சர்ச்சைகளில் அவருக்கு ஆதரவாகவே நாங்கள் பேசி வந்தோம்.

- Advertisement -

ஆனால் இப்போது உருவாகியுள்ள திரிஷா சர்ச்சை காரணமாக இனிமேல் அவரை பாதுகாக்க முடியாது. ஒரு நடிகராக இருக்கும் போது வரும் சர்ச்சை வேறு. ஆனால் அரசியலில் களத்தில் இருக்கும் ஒருவருக்கு பொது வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்த பிறகு ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பொதுமக்களின் கவனத்தில் தான் இருக்கும்.

அதனால் திரிஷா விவகாரத்தில் நடிகர் விஜய் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இனியும் நடிகர் விஜய்க்கு ஆதவராக எங்களால் முட்டுக்கொடுக்க முடியாது. அதுவும் திரிஷாவுடன் அவர் காட்டும் நெருக்கத்துக்கு எல்லாம் முட்டு கொடுப்பது யாராக இருந்தாலும் மிகவும் தவறாகி விடும் என்றும் அந்தணன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்