நடிகர் ராகவா லாரன்ஸ் விரைவில் தவெக கட்சியில் இணைய உள்ளதாக ஒரு தகவல் பரவிய நிலையில் சமீபத்தில் கடும் சர்ச்சையைில் அவர் சிக்கிய குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, நடிகர் ராகவா லாரன்ஸ்சின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிக்கும் போது தவெக தன்னை அழைக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருப்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.
தவெகவினர் தற்குறிகள் அல்ல அம்புக்குறிகள் என்றெல்லாம் தவெகவுக்கு முட்டுக்கொடுப்பதை பார்த்தால் தெளிவாக தெரிகிறது. தனது நண்பர் விஜய் என்கிறார். ஆனால் விஜயின் நட்பு வட்டாரத்தில் எனக்கு தெரிந்து லாரன்ஸ் இருக்கிறாரா என்றே தெரியவில்லை.
அவருடன் வேலை செய்தவர், டெக்னீஷியன் என்ற முறையில் லாரன்ஸ்சுடன் விஜய்க்கு பழக்கம் நட்பு இருக்கலாம். ஆனால் நண்பர்கள் என்ற முறையில் விஜயுடன் இருப்பவர்கள் 5 பேர் மட்டும்தான். அந்த லிஸ்ட்டில் லாரன்ஸ் இல்லை என்பது நமக்கு உறுதியாக தெரியும்.
விஜய்க்கு லாரன்ஸ் முட்டுக்கொடுப்பதை பார்க்கும் போது விஜய் தன்னை அழைப்பார் என்று இவர் எதிர்பார்ப்பது தெரிகிறது. ஆனால் விஜய் எப்படிப்பட்டவர் என்பது லாரன்ஸ்க்கு தெரியாது. தவெகவுக்கு விழுகிற ஒவ்வொரு ஓட்டும் எனக்காக விழ வேண்டும் என்று நினைக்கிற கேரக்டர்தான் விஜய்.
தாடி பாலாஜி உள்ளிட்ட பல துணை நடிகர்கள் தவெகவுக்கு வந்த போது விஜய் அவர்களை பக்கத்தில் சேர்க்காததற்கு காரணம், அவர்கள் தனக்கு 10 பேரை வைத்துக்கொண்டு இந்த தொகுதியில் என்னால்தான் ஜெயித்தார்கள் என்று பேசுவார்கள். அப்படி எல்லாம் இல்லை. எல்லா ஓட்டுகளும் என்னால் வந்தது என்று நிரூபிக்கிற ஆசைப்படுகிற ஒருவர்தான் விஜய்.
எனக்கு தெரிந்து விஜய் லாரன்ஸ்சை அழைக்க மாட்டார். அதை விட இப்படி சர்ச்சையில் சிக்கிய மக்களால் வெறுக்கப்படுகிற ஒருவரை நிச்சயமாக விஜய் தவெக கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டார் என்று அந்த நேர்காணலில் பிஸ்மி உறுதியாக கூறியிருக்கிறார். நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் தெருநாய்களுடன் பொதுமக்களை ஒப்பிட்டு பேசி பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





