- Advertisement -
Homeபொழுதுபோக்குவிசித்திரா விவகாரம்.. கமல் ஹாசன் மழுப்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.. மனம் திறந்த பிஸ்மி

விசித்திரா விவகாரம்.. கமல் ஹாசன் மழுப்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.. மனம் திறந்த பிஸ்மி

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடந்துவருகிறது. இதுவரை பவா செல்லதுரை, பிரதீப் ஆண்டனி, வினுஷா, அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு, கானா பாலா ஆகியோர் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். இவர்களில் பிரதீப் ஆண்டனி மட்டும் ரெட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். அந்த முடிவுக்கு எதிராக இன்னும் சிலர் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட பிறகு பிக்பாஸ் வீட்டில் கண்டெண்ட் தருபவராக மாறியிருக்கிறார் விசித்திரா. அவருக்கு ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பும் இருக்கிறது. முதல் வாரத்திலேயே வெளியேறிவிடுவார் என்று பலரும் நினைத்த சூழலில் அவர் 8 வாரங்களாக தாக்குப்பிடித்துக்கொண்டிருக்கிறார். அவரது கேம் ஸ்ட்ரேட்டஜியும் நன்றாகவே இருக்கிறது.

இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு பூகம்பம் டாஸ்க்கில் பேசியபோது தனக்கு சினிமாவில் ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் அவர். அவர் கூறிய விஷயங்களை வைத்து பார்க்கும்போது விசித்திராவை படுக்கைக்கு அழைத்த டாப் ஹீரோ பாலகிருஷ்ணாதான் என்று நெட்டிசன்ஸ் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அதனையடுத்து ட்விட்டரில் பாலைய்யாவை வெளுத்துவருகிறார்கள்.

தற்போது இந்த விஷயத்தில் அடுத்தக்கட்ட எதிர்பார்ப்பாக இருப்பது என்னவென்றால் கமல் ஹாசன் இந்த டாபிக்கை எப்படி ஹேண்டில் செய்யப்போகிறார் என்பதுதான். எனவே சனி, ஞாயிறு எபிசோடுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் பேசிய அவர், “பாலியல் தொல்லை நடிகைகளுக்கு எப்போதும் இருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் பிக்பாஸில் விசித்திரா வெளிப்படுத்திய விஷயம். தற்போது இந்த விஷயத்தில் கமல் என்ன பேசப்போகிறார் என்பதுதான் பெரும்பாலானோரின் எண்ணம். அவர் ஒரு நேர்மையான மனிதராக, தொகுப்பாளராக, அரசியல்வாதியாக இருந்தால் இதுகுறித்து அவர் பேசித்தான் ஆக வேண்டும்.

ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. என்னவென்றால் இந்த விஷயம் பற்றி பேசும்போது பாலைய்யாவுக்கு பாதிப்பு ஏற்படும்படி அமைந்துவிட்டால் கமல் படங்களை ஆந்திராவில் ஓட விடமாட்டார்கள். அவர் வேறு இப்போது பான் இந்தியா ஸ்டாராக இருக்கிறார். அதனால் இந்த விஷயத்தை மழுப்பி பேசுவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது” என்றார். ஆண்டவர் என்ன செய்யப்போறாரோ பார்ப்போம்..

சற்று முன்