- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது எல்லாம் ஒரு திரைப்படமா? என்னால் ஏத்துக்குவே முடியலே - டோரதி படம் குறித்து கடுமையாக...

இது எல்லாம் ஒரு திரைப்படமா? என்னால் ஏத்துக்குவே முடியலே – டோரதி படம் குறித்து கடுமையாக விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் சனந்த் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படம் டோரதி. இந்த படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 10வது படமாகும். இளையராஜா படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். நேற்று முன்தினம் வெளியான இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் டோரதி படம் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, சில அறிவு ஜீவிகள் படம் எடுப்பார்கள். அந்த படங்களை பற்றி நாம் எந்தவிதமான எதிர்மறையான விமர்சனத்தையும் செய்யக்கூடாது. அப்படி ஒரு அறிவுஜீவித்தனமான படம் தான் இந்த டோரதி. இந்த படம் கார்த்திக் சுப்பராஜின் பத்தாவது படம்.

- Advertisement -

அவருடைய பீட்சா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பேட்ட ரஜினி ரசிகர்களுக்கான படம். ஆனால் இந்த டோரதி படம் பற்றி பேசும்போது இது ஒரு எசக்குபிசக்கான படமாக இருக்குன்னு செய்திகள் வந்தது. ஆனால் நம்ம நெகட்டிவ் விமர்சனம் செஞ்சா இந்த அறிவுஜீவிகள் நம்மளை விமர்சிக்க ஆரம்பித்து விடுவாங்க. மதுரையை மையமாக வைத்து நகர்கிற கதையில் இரண்டு நண்பர்கள் இருக்காங்க.

அதுல ஒரு நண்பருக்கு உடல் ரீதியான மாற்றம் ஏற்படுகிறது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் டோரதி படத்தின் கதை. இந்த படம் எல்ஜிபிடி – பாலின மாறுபாடு குறித்து பேசுகிறது. இது மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியல. ஆனா என்னால இந்த கதையையும் முக்கியமா படத்தின் கிளைமாக்ஸ்சையும் ஏத்துக்கவே முடியல.

- Advertisement -

படத்துல கீர்த்தி சுரேஷ் வராங்க. அப்புறம் காணாமல் போயிடுறாங்க. அவங்க எதுக்கு வர்றாங்க? அப்புறம் என்ன ஆனாங்களோ தெரியல. ஆனா படத்துல நடிச்ச ரிஷிகாந்த் சனந்த் இரண்டு பேருமே அற்புதமா நடித்திருக்காங்க. கார்த்திக் சுப்பராஜ் பெரிய இயக்குனர் என்பதால் இந்த கதையை கேட்காமல் நடிச்சிருக்காங்க போல. படத்தில் வரும் கல்யாண விருந்து பாடலையும் பின்னணி இசையும் கேட்டு தான் அப்படியே மயங்கி படம் பார்த்து ஏமாந்துட்டேன்.

இதுக்கு மேல இந்த படம் பற்றி சொல்வதற்கு எதுவுமே இல்லை என்று மூத்த சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அந்த விமர்சனத்தில் கடுமையாக பேசி இருக்கிறார். அதாவது திருநங்கையான மாறும் தனது நண்பனை கதாநாயகன் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்வதுதான் இந்த படத்தின் கதைக்களம் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்