- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்பவும் நானும் அவரும் டச்ல இருக்கோம்… என்னைவிட சின்ன பையன்… எனக்கு ரொம்ப பிடிக்கும் -...

இப்பவும் நானும் அவரும் டச்ல இருக்கோம்… என்னைவிட சின்ன பையன்… எனக்கு ரொம்ப பிடிக்கும் – நடிகர் சிம்பு குறித்து பேசிய பிரபல நடிகை!

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். அவரது மகன் சிம்பு என் தங்கை கல்யாணி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அதில் தனது அப்பா டிஆர் போலவே ரிக்‌ஷாக்காரன் கெட்டப்பில் வந்து வசனம் பேசி நடித்திருப்பார். அப்போதே தியேட்டரில் விசில் பறந்தது. லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டமும் அப்போதே கிடைத்தது.

அதன்பிறகு காதல் அழிவதில்லை படம் மூலம் நடிகர் சிம்பு ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு வல்லவன் மன்மதன் கோவில் குத்து தம் சிலம்பாட்டம் என பல படங்களில் சிம்பு நடித்து முன்னணி நட்சத்திர நடிகராக மாறினார். தக்லைஃப் படத்துக்கு பிறகு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகர் சிம்பு 40 வயதுகளை கடந்தும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். அவரது பெற்றோர் டி ராஜேந்தர் – உஷா அவருக்கு தொடர்ந்து பெண் பார்த்து வரும் நிலையில் இன்னும் எந்த பெண்ணும் அவர்களுக்கு சரியாக அமையவில்லை. இதற்கிடையே சில காதல் கிசுகிசுக்களில் சிக்கிய சிம்புவும் இப்போது அதை எல்லாம் விட்டு வெளியே வந்துவிட்டார்

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக கடந்த 1990களில் வலம் வந்தவர் ஜோதிகா. கமல் விஜய் அஜீத்குமார் சூர்யா என பல ஹீரோக்களுக்கு ஜோதிகா ஜோடியாக நடித்தவர். குறிப்பாக சந்திரமுகி காக்க காக்க குஷி மொழி சில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களில் ஜோதிகா நடிப்பு வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

அந்த காலகட்டத்தில் நடிகர் சிம்புவுடன் மன்மதன் சரவணா போன்ற படங்களில் ஜோதிகா நாயகியாக நடித்திருந்தார். அந்த படங்களும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஜோதிகா கூறியதாவது, நான் நடித்த நடிகர்களில் என்னை விட வயது குறைவாக இருந்த நடிகர் யார் என்றால் அது சிம்பு தான்.

ஆனால் நாங்கள் இப்பவும் டச்சுலதான் இருக்கோம். எனக்கு சிம்புவை ரொம்ப பிடிக்கும். செக்கச் சிவந்த வானம் படத்துல கூட நாங்க சேர்ந்து நடித்திருந்தோம். இப்பவும் ஏதாச்சும் என் படம் பார்த்தால் உடனே எனக்கு போன் பண்ணி சிம்பு பேசுவார் என்று நடிகை ஜோதிகா அந்த நேர்கோணலில் நடிகர் சிம்பு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்