- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த ஆண்டில் சச்சின் மட்டுமல்ல, தளபதி நடித்த அந்த படமும் விரைவில் ரி ரிலீஸ் -...

இந்த ஆண்டில் சச்சின் மட்டுமல்ல, தளபதி நடித்த அந்த படமும் விரைவில் ரி ரிலீஸ் – ஏகே ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுங்கடே..!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தனது 69வது படம் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கப் போவது இல்லை, இதுதான் தனது கடைசி படம் என உறுதியாக அறிவித்து விட்டார். இடையே அவர் 70வது படத்தில் நடிக்க போகிறார் என்ற பரவிய தகவல் எல்லாம் வதந்தி என்பதும் உறுதியாகி விட்டது.

இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் நடிகர் விஜய் இருக்கிறார். அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகன் படத்துடன் சினிமா நடிப்புக்கு பை பை சொல்லிவிட்டு நடிகர் விஜய் தவெக கட்சி தலைவராக முழுநேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தமிழக மக்கள் வரவேற்றாலும், ரசிகர்களாக அவரது புதிய படங்களை இனி பார்க்க முடியாதே என்ற ஏக்கமும் வருத்தமும் விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அரசியலில் இருந்தாலும் அவ்வப்போது ஒரு படங்களில் ரசிகர்களுக்காக நடியுங்கள் என பலரும் விஜய்க்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படுகின்றன. 20 ஆண்டுகள் 25 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற படங்களை மீண்டும் புதிய தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் சவுண்ட் எபெக்ட்களுடன் வெளியிட்டு தயாரிப்பாளர்கள் கணிசமான லாபம் பார்க்கின்றனர். கிளாசிக் படங்களான இந்த படங்களை தங்களது அபிமான நடிகர்களை இப்போதும் வெள்ளித் திரையில் காண, ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் நடிகர் விஜய் திரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் 2004ம் ஆண்டில் வெளியான கில்லி படம் கடந்த ஆண்டில் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இப்போது 2005ம் ஆண்டில் வெளியான சச்சின் படத்தை 20 ஆண்டுகள் ஆன நிலையில் ரி ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே கடந்த 1997ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற காதலுக்கு மரியாதை படத்தையும் ரி ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த படம் காதலுக்கு மரியாதை. இந்த படத்தில் நடிகை ஷாலினியும் நாயகியாக அறிமுகமாகி இருந்தார். அதனால் ஏகே ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுவார்கள். பாசில் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இந்த படமும் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் செய்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்