- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில், வரும்… ஆனா வராது என்ற பாணியில் பேசிய இயக்குனர்...

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில், வரும்… ஆனா வராது என்ற பாணியில் பேசிய இயக்குனர் ஷங்கர் – இந்த படத்தில் காஜல் அகர்வால் இருக்காங்களா, இல்லையா?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

இந்தியன் படம் வெளியாகி, 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 படம் ரிலீஸாகிறது. இதையொட்டி, இந்தியன் படத்தையும் வரும் 7ம் தேதி ரிலீஸ் செய்கிறார் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம். ஏனெனில், இந்தியன் படத்தை பார்ப்பவர்களுக்கு, இந்தியன் 2 படம் அதன் தொடர்ச்சியாக இருக்கும்.

- Advertisement -

இந்தியன் படம் 1996ல் வெளிவந்தததால் 2கே கிட்ஸ், அந்த படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இப்போது ரி ரிலீஸ் செய்யப்படும் இந்தியன் படத்தை பார்க்கும் போது, அது முதல் பாகமாகவும். இந்தியன் 2 படம், அவர்களுக்கு தெளிவாகவும் புரியும்.

இந்தியன் 2 படத்தை திரைக்கதையாக உருவாக்கும் போதே, இந்தியன் 3 படத்துக்கான கண்டென்டும் இயக்குனர் ஷங்கருக்கு கிடைத்து விட்டதால், 2ம் பாகத்துடன் 3ம் பாகத்துக்கான காட்சிகளையும் எடுத்துள்ளார். இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இந்தியன் 2 படத்திற்கு முன்பே, இந்தியன் 3 படத்திற்கான படப்பிடிப்பை முடித்திருக்கிறார் ஷங்கர்.

- Advertisement -

இந்நிலையில், நேற்று இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. அப்போது பேசிய ஷங்கர் இந்தியன் படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளாரா, இல்லையா என்ற குழப்பத்துக்கு வரும், வராது என்ற பாணியில் பதில் அளித்து முடிவை தெளிவாக அறிவித்து விட்டார்.

ஏனெனில் இந்தியன் 2 படத்தில் டீசர், பிரமோ காட்சிகளில், காஜல் அகர்வாலை காண முடியவில்லை. ஆனால், நேற்றைய விழாவில் முக்கிய விருந்தினராக காஜல் அகர்வாலும் அழகான டிரஸ்சில் வந்து கலந்துக்கொண்டார். விழா மேடையில் ஷங்கர் பேசுகையில், இந்தியன் படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார், ஆனால் இந்தியன் 2 படத்தில் அவர் நடித்த காட்சிகள் வராது. ஆனால் இந்தியன் 3 படத்தில், அவரும், கமலும் நடித்த இளமை கால காட்சிகள் வரும் என்று கூறியிருக்கிறார். அதாவது இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

- Advertisement -

சற்று முன்