நடிகை கஜோல் பாலிவுட்டின் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர். தமிழில் கஜோல், “மின்சார கனவு” திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் அதன் பின் தமிழில் யாரும் கஜோலுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ஆதலால் ஏற்கனவே தான் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் பாலிவுட் உலகத்திற்கே மீண்டும் சென்றுவிட்டார்.

அதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து தனுஷின் “வேலை இல்லா பட்டதாரி 2” திரைப்படத்தில் நடித்தார். சமீபத்தில் கஜோல் நெட்ஃபிளிக்ஸில் வெளியான “லஸ்ட் ஸ்டோரீஸ்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுவே பரபரப்பாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் “தி டிரையல்” என்ற வெப் சீரீஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரீஸ் கடந்த வாரம் வெளியானது.
இந்த நிலையில் “தி டிரையல்” வெப் சீரீஸில் ஒரு லிப் லாப் காட்சியில் கஜோல் நடித்திருக்கிறார். அந்த காட்சி சமீப நாட்களாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது இந்த காட்சியை குறித்த ஒரு தகவல் வெளியானதால் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது இந்த வெப் சீரீஸில் கஜோலுடன் இணைந்து நடித்த ஆல்லி என்ற நடிகர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தாராம். அந்த பேட்டியில் அந்த முத்த காட்சியில் நடிப்பதற்காக கஜோல் இரண்டு முறை ஒத்திகை பார்த்ததாகவும் அதன் பின் அதில் நடித்ததாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கஜோலுக்கு தற்போது 48 வயதாகிறது. இந்த வயதிலும் கஜோல் லிப் லாப் காட்சியில் எந்த தயக்கமும் இன்றி நடிப்பது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.





