- Advertisement -
Homeபொழுதுபோக்கு7 வருஷம் ஆச்சே… இன்னுமா டைட்டானிக் கப்பல் கரை சேரலே? - படத்தின் தயாரிப்பாளருக்கு நடிகர்...

7 வருஷம் ஆச்சே… இன்னுமா டைட்டானிக் கப்பல் கரை சேரலே? – படத்தின் தயாரிப்பாளருக்கு நடிகர் கலையரசன் வைத்த கோரிக்கை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சொற்பமான எண்ணிக்கையில் படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கலையரசன். மெட்ராஸ் அதே கண்கள் காலா வாழை சார்பட்டா பரம்பரை தானா சேர்ந்த கூட்டம் மதயானை கூட்டம் அட்டக்கத்தி டார்லிங் ராஜா மந்திரி உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கலையரசன் ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்று டைட்டானிக் கப்பலும் கவுந்து போகும். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவராக இருப்பவர் சிவி குமார். இவர் பல வெற்றி படங்களைதயாரித்திருக்கிறார். சிவி குமார் தயாரிப்பில் இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் உருவான படம்தான் டைட்டானிக் காதலும் கவுந்து போகும்.

- Advertisement -

இந்த படத்தில் கலையரசன் ஆனந்தி ஆஷ்னா ஜவேரி காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை கடந்த 2018ம் ஆண்டிலேயே வெளிவந்தது. அதன் பின் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படத்தின் டிரெய்லரை கடந்த 2022ம் ஆண்டில் வெளியிட்டனர்.

ஆனால் படம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல சிக்கல்களால் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படம் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் கலையரசன். நேற்று கலையரசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படத்தின் தயாரிப்பாளர் சி வி குமாருக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.

- Advertisement -

அந்த பதிவில் நடிகர் கலையரசன் கூறியிருப்பதாவது. குமார் சார். டைட்டானிக் படத்தை ஏன் இன்னும் ரிலீஸ் செய்யாமல் இருக்கிறீர்கள்? இந்த படத்தின் இயக்குனர் ஜானகிராமன் மற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அவர்களது கடுமையான உழைப்புக்கு பின்னர் நல்ல வெளியீட்டிற்கு தகுதியானவர்கள். இது ஒரு சிறந்த படம் சார். நம் அனைவருக்கும் இந்த படம் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் சார். பிளீஸ் என அந்த பதிவில் கலையரசன் கோரிக்கை வைத்துள்ளார்.

கலையரசன் செய்த இந்த பதிவை படத்தின் நடித்த ஆஷ்னா ஜவேரியும் பகிர்ந்து, காத்திருக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். படத்தின் நாயகன் நாயகி செய்துள்ள இந்த பதிவிற்கு, டைட்டானிக் கப்பலும் கவுந்து போகும் படத்தின் தயாரிப்பாளர் சிவி குமார் தரப்பில் இன்னும் எந்த ஒரு பதிலையும் பதிவிடாமல் இருப்பது, ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. ஒருவேளை டைட்டானிக் காதலும் கவுந்து போகும் என்று தலைப்பு, படம் வெளியானாலும் கவுந்து தான் போகும், கரை சேராது, பெரிய வெற்றியை படம் பெறாது என்று தயாரிப்பாளர் நினைத்துவிட்டாரா என்று ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்