- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் சக்சஸ்.. ரஜினிகாந்த்துக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்.. ட்ரெண்டாகும் வீடியோ

ஜெயிலர் சக்சஸ்.. ரஜினிகாந்த்துக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்.. ட்ரெண்டாகும் வீடியோ

- Advertisement -

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிக்கு கடந்த சில வருடங்களாக படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இதன் காரணமாக எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என அவர் நினைத்திருந்தார். அதேசமயம் பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டால் நெல்சன் ரஜினியை வைத்து ஏதேனும் சொதப்பிவிடுவாரோ எனவும் ரஜினி ரசிகர்கள் சந்தேகப்பட்டனர்.

ஆனால் அவர்களின் சந்தேகத்தை எல்லாம் நெல்சன் திலீப்குமார் தனது மேக்கிங்கில் அடித்து துவம்சம் செய்துவிட்டார். காட்சிக்கு காட்சி ரஜினியை பார்த்து பார்த்து காட்சிப்படுத்தியிருந்தார். மேலும் அவரது டார்க் காமெடியும் பல இடங்களில் ஒர்க் அவுட் ஆனது. இதன் காரணமாக ரஜினிகாந்த்தும், நெல்சன் திலீப்குமாரும் தரமான கம்பேக்கை கொடுத்திருக்கின்றனர்.

விமர்சன ரீதியாக படத்துக்கு பாஸிட்டிவ் ரிவ்யூ வந்தது. அதேபோல் வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டது. இதுவரை உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் கமல் நடித்த விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து தான் ஒரு வசூல் சக்கரவர்த்தி என்பதை ரஜினி நிரூபித்துவிட்டார் என அவரது ரசிகரக்ள் கூறுகின்றனர்.

இந்தச் சூழலில் ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனரும், தயாரிப்பாளருமான கலாநிதி மாறன் நேற்று ரஜினி வீட்டில் அவரை நேரில் சந்தித்தார். அப்போது பூங்கொத்தையும், செக்கையும் ரஜினிக்கு கொடுத்தார். அந்த செக் எதற்காக கொடுக்கப்பட்டது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

இதனையடுத்து ஜெயிலர் படத்தின் லாபத்திலிருந்து ரஜினிக்கு சேர வேண்டிய 100 கோடி ரூபாய்க்கான செக்தான் அது என தீயாக தகவல் பரவிவருகிறது. இதனிடையே ஜெயிலர் படம் ஸ்டார்ட் செய்யும்போதே படத்தின் லாபத்தில் 100 கோடி ரூபாய் வேண்டும் எனவும்; சம்பளம் 110 கோடி ரூபாய் வேண்டுமெனவும் கண்டிஷன் போட்டதாகவும் அதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் நேற்று ரஜினிக்கு கலாநிதி மாறன் செக் கொடுத்தது மட்டுமின்றி விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரை சர்ப்ரை கிஃப்ட்டாக கொடுத்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இன்றுதான் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. இதனையடுத்து நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் என்ன பரிசு கொடுக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியிருக்கிறது.

சற்று முன்