- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை நிவேதா பெத்துராஜூக்கு வரும் ஜனவரியில் சென்னையில் திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?...

நடிகை நிவேதா பெத்துராஜூக்கு வரும் ஜனவரியில் சென்னையில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா? – புடிச்சாலும் புளியகொம்பா புடிச்சிடடாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் டிக் டிக் டிக் திமிரு புடிச்சவன் சங்கத்தமிழன் பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்தார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நிவேதா பெத்துராஜ் நடித்தார். தமிழில் திமிரு புடிச்சவன் டிக் டிக் டிக் படங்களில் இவரது நடிப்பும் கவர்ச்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சினிமா மட்டுமின்றி விளையாட்டுகளிலும் அதிக ஆர்வம் கொண்ட நிவேதா பெத்துராஜ் விளையாட்டு வீராங்கணையாக உள்ளார்.

- Advertisement -

மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று பலமுறை வெற்றி பெற்றவர். ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். சினிமாவில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் கலந்துக்கொள்கிறார். இவர் தூத்துக்குடியை சேர்ந்தவர். இவரது தந்தை பெத்துராஜ் ஒரு பெரிய தொழிலதிபர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் புகைப்படத்தின் கீழே ஹார்ட்டின் ஈமோஜிகளை பதிவிட்டுள்ளார். அவரது காதலரின் பெயர் ரஜித் இப்ரான். அவர் மாடலிங் துறை சார்ந்தவர். துபாய் மற்றும் சென்னையில் சொந்தமாக பிஸினஸ் செய்யும் பெரிய தொழிலதிபராக உள்ளார். ரஜித் இப்ரானுக்கும் நிவேதா பெத்துராஜூக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

- Advertisement -

ரஜித் இப்ரான் – நிவேதா பெத்துராஜ் திருமணம் வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியதாவது, நானும் ரஜித் இப்ரானும் கடந்த 5 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவரை காதலித்து வருகிறோம் என்பது எங்களுக்கு தெரியவந்தது. இதைப்பற்றி எங்களது பெற்றோரிடம் கூறினோம். அவர்களும் உடனே எங்களது திருமணத்துக்கு மனப்பூர்வமான சம்மதம் தெரிவித்தனர்.

அதனால் எங்கள் திருமணம் இருதரப்பு பெற்றோர்களின் சம்மதம் மற்றும் ஆசீர்வாதத்துடன் நடக்கும் காதல் திருமணமாகும். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு எங்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. வருகிற 2026 ம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் எங்கள் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு பிறகும் நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்