- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமல் எடுத்த முக்கிய முடிவு, அன்பறிவ் இயக்கும் கமல் படத்தின் ஹீரோயின் சிம்பு பட...

நடிகர் கமல் எடுத்த முக்கிய முடிவு, அன்பறிவ் இயக்கும் கமல் படத்தின் ஹீரோயின் சிம்பு பட நாயகியா? – அந்த 2 பேர் நோ சொல்லிட்டாங்களா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 மற்றும் தக்லைஃப் என்ற 2 படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக மிக மோசமான படங்களாகவும் அவை இருந்தன. இயக்குனர்கள் ஷங்கர் மணிரத்னம் போன்ற ஜாம்பவான்களின் படங்களாக அவை இருந்தும் கமல்ஹாசனே நடித்தும் படங்கள் தோல்வியை தழுவின.

இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இரட்டை சகோதரர்கள் இயக்கத்தில் தனது 237வது படத்தில் அடுத்து நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பை துவங்க முன் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே வருகிற 25ம் தேதி நடிகர் கமல் ராஜ்யசபா எம்பி யாக பொறுப்பேற்கவும் இருக்கிறார்.

- Advertisement -

கமலின் 237வது படத்தில் நாயகியாக நடிக்க முதலில் நடிகை சாய்பல்லவியை அணுகிய நிலையில், அவர் இராமாயணம் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் படத்தில் நடித்து வருவதால் கால்ஷீட் இல்லை என மறுத்துவிட்டார். மதராஸி படத்தில் நடித்துள்ள ருக்மணி வசந்தும் கால்ஷீட் இல்லை என கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இப்போது மாநாடு படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷனுடன் படக்குழு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஓகே சொல்வதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தில் இவர் கமலுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பில்லை. முக்கிய கேரக்டராக இருக்கலாம் என்றும் தெரிய வருகிறது.

- Advertisement -

மலையாளம் தமிழ் தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோடு மாநாடு மற்றும் நடிகர் ரவிமோகன் நடித்துள்ள ஜீனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இன்னும் ஜீனி படம் ரிலீஸாகவில்லை. மாநாடு படம் மாஸ் ஹிட் ஆகியும் அதில் நாயகியாக நடித்த கல்யாணி பிரியதர்ஷனுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரவில்லை. ஆனால் விளம்பர படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார்.

மேலும் நடிகர் கமல்ஹாசன் இப்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். அதன்படி அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று தீர்மானித்திருக்கிறார். தனது படங்கள் மாஸ் ஹிட் ஆனால் இதன்மூலம் தயாரிப்பாளராகவும் கணிசமான வருமானம் கிடைக்கும் என்று இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்