- Advertisement -
நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த அரசியல் பிரபலங்கள் கலையுலக நண்பர்கள் எழுத்தாளர்கள் என்னைக் கொண்டாடி ஆதரிக்கும் ரசிகப்பெருமக்கள் உங்கள் அத்தனை பேரின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள் அன்பான நல விசாரிப்புகள் என்னை நெகிழ வைக்கின்றன. இதைவிட இந்த வாழ்வில் வேறென்ன வேண்டுமென என் நெஞ்சம் நெகிழ்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனதின் அடியாழத்தில் இருந்து மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு கலைஞனாக உங்களை மகிழ்விப்பேன், ஒரு தலைவனாக உங்கள் நலனுக்காக உழைப்பேன், ஒரு மனிதனாக நேர் வழியில் நடப்பேன். என் உயிரும் உறவும் தமிழுமாகத் திகழும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகுக! உங்கள் நான் கமல்ஹாசன் என்று கூறியிருக்கிறார்.





