தமிழ் சினிமாவில், 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படம் மூலம் களத்தில் இறக்கி விட்டபட்டவர்தான் கமல். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக, நாயகனாக, திரைக்கதை ஆசிரியராக, பாடல் ஆசிரியராக, உதவி இயக்குநராக, இயக்குநராக, தொழில்நுட்ப கலைஞராக கமல், தமிழ் சினிமாவில் அனைத்துபடிகளையும் தொட்டவர். வென்றவர் என்பதால்தான் அவருக்கு பெயரே சகலகலா வல்லவன்தான்.
ஒரு நடிகராக மட்டுமின்றி, இந்திய திரைத்துறை சார்ந்த கலைஞராக, ஒரு படைப்பாளியாக தமிழ் சினிமாவை அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றவர் கமல்ஹாசன் என்றால் மிகையல்ல. மேக்கப்பில் அவர் தொட்ட உச்சங்கள் அதிகம். எந்த படத்தில், எந்த கேரக்டர் என்றாலும், அதற்கேற்ப தன்னை வடிவமைப்பதில், தன் கேரக்டரை செதுக்கிக் கொள்வதில் அவருக்கு நிகர் அவரேதான். 70 வயதுகளை நெருங்கும் இன்றைய நிலையிலும், இந்தியன் தாத்தா கேரக்டருக்காக, 8 மணி நேரம் வரை சாப்பிடாமல், ஜூஸ் அருந்திக்கொண்டு இருப்பவர்தான் கமல்ஹாசன்.
புகழில், சாதனையில் இனிமேல் தான் அவர் சாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்ற நிலையிலும், இன்னும் இன்னும் நிறைய சாதனைகளை படைக்கும் ஆர்வத்தில் இருக்கும் கமல்ஹாசன், திரைக்கலைஞனாக அவரது புகழில், மரியாதையில் இன்னும் சிகரத்தில் இருக்கிறார். அவரை யாரும் நெருங்க முடியாத உயரத்தில் இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
அதே வேளையில் குடும்ப வாழ்க்கையில், அவரது தனிப்பட்ட விஷயங்களில் பல்வேறு விமர்சனங்களை, சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார். குறிப்பாக 2 மனைவிகளை விவகாரத்து செய்தது, சிம்ரன், பூஜாகுமார் உள்ளிட்டவர்களுடன் அவர் வைத்திருந்த தொடர்பு, குறிப்பாக கவுதமியுடன் 17 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியது போன்ற விஷயங்கள் அவரை விமர்சிக்க காரணங்களாக இருந்தன.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆறு ஆண்டுகளை நடத்தி முடித்த நிலையில், இப்போது 7வது ஆண்டில், பிக்பாஸ் சீசன் 7 நடந்து வருகிறது. வழக்கம்போல, நடப்பாண்டிலும் கமல்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதில் கடந்தமுறை ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகள். இப்போது நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது மகள் ஜோவிகா, கலந்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். முகத்தில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் பதிவிட்ட போட்டோவை பார்த்த பலரும் அவரை அழைத்து நலம் விசாரித்தனர். ஆறுதல் கூறினர். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு மாஜி போட்டியாளர், தனது சினிமா நண்பர் விஜயகுமார் மகள் என்ற அடிப்படையிலாவது, கமல்ஹாசன், வனிதா விஜயகுமாரை போனில் அழைத்து நலம் விசாரித்திருக்கலாம். விசித்ரா கணவரை அழைத்து பேசத் தெரிந்த கமலுக்கு, வனிதா எப்படி தெரியாமல் போனார். இப்படி கண்டுக்காமல் அலட்சியப்படுத்தியது சரியா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.





