- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் ரிலீஸ்சில் நீடிக்கும் சிக்கல், வினியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பித் தரும் தயாரிப்பு நிறுவனம்? -...

ஜனநாயகன் படம் ரிலீஸ்சில் நீடிக்கும் சிக்கல், வினியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பித் தரும் தயாரிப்பு நிறுவனம்? – அப்செட்டில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகராக இருந்த போது விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை.

அதன் காரணமாக ஜனநாயகன் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. நடிகர் விஜய் நடித்த கடைசி படம் என்பதால் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இன்று வரை காத்திருக்கின்றனர். ஆனால் சென்சார் போர்டு ரிவைசிங் கமிட்டி இந்த படத்தை பார்த்து சில மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தணிக்கை சான்றிதழ் பெறும் முயற்சியில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து முயற்சித்தும் அவர்களுக்கு சென்சார் தரப்பில் இதுவரை சரியான தகவல் அளிக்கப்படவில்லை. இந்த படத்திற்கான ஓடிடி உரிமம் வாங்கிய அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனமும் தங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது.

அதன் பின்பு ஜனநாயகன் படமும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக லீக்காகி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 10 பேர் வரை சைபர் கிரமை் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஜனநாயகன் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி தந்து விடுங்கள் என்று படத்தின் தயாரிப்பாளரிடம் தமிழக முதல்வர் விஜய் சொன்னதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் இனியும் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க தமிழக முதல்வராக தற்போது இருக்கும் விஜய் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகுமா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

ஜனநாயகன் படம் வெளியீடு என்பது கடந்த 5 மாதங்களாகவே சஸ்பென்ஸ் ஆக நீடித்து வரும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் படத்தின் ஹீரோ என யாருக்குமே இந்த படம் வெளியாகுமா? எப்போது வெளியாகும் என்று தெரியாத ஒரு குழப்பமான மனநிலையில் உள்ளனர் என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது. ஜனநாயகன் படம் வெளியாவதில் நீடிக்கும் சிக்கல் விஜய் தமிழக முதல்வராக அதிகாரத்துக்கு வந்த பின்பும் தொடர்வதுதான் விந்தையாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்