- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த பல ஆண்டுகளாக நான் பிறந்த நாள் கொண்டாடுவதை விட்டு விட்டேன், அதற்கு காரணம் அந்த...

கடந்த பல ஆண்டுகளாக நான் பிறந்த நாள் கொண்டாடுவதை விட்டு விட்டேன், அதற்கு காரணம் அந்த இயக்குனர்தான் – உண்மையை போட்டுடைத்த நடிகை கஸ்தூரி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை கஸ்தூரி. ஆத்தா உன் கோயிலிலே தென்றல் வரும் தெரு ராக்காயி கோயில் இந்தியன் சின்னவர் ராஜபாண்டி உடன்பிறப்பு செந்தமிழ் பாட்டு காதல் கவிதை அபிராமி உரிமை ஊஞ்சலாடுகிறது வாட்ச்மேன் வடிவேலு உள்ளிட்ட பல படங்களின் நடித்திருக்கிறார்.

குறிப்பாக கடந்த 1994ம் ஆண்டில் வெளியான அமைதிப்படை படத்தில் நடிகை கஸ்தூரி தாயம்மா என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் மணிவண்ணன் டைரக்ட் செய்திருந்தார். அந்தப் படத்தில் போலி அரசியல்வாதியாக எம்எல்ஏ நாகராஜன் சோழன் கேரக்டரில் சத்யராஜ் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ் அப்பா – மகன் என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுவரை வந்த அரசியல் படங்களில் தமிழ் சினிமாவில் அமைதிப்படை படம்தான் அரசியல் முகமூடிகளை தோலுரித்து காட்டிய ஒரு சமூக விழிப்புணர்வு படமாக இருந்தது. குறிப்பாக தவெக தலைவர் தமிழக முதல்வர் விஜய் தனது அரசியல் நடவடிக்கைகளை எல்லாம் ஜோதிடர் மூலமாகவே கணித்து அதன்மூலமாகவே ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கிறார் என்று கூறப்படுகிறது. 32 ஆண்டுகளுக்கு முன்பே அமைதிப்படை படத்தில் அப்படி ஒரு காட்சியை ஜோதிடரிடம் அரசியல்வாதி சத்யராஜ் ஜாதகம் கேட்பது போல இயக்குனர் மணிவண்ணன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கஸ்தூரி பல படங்களில் நடித்த நிலையில் சமீபகாலமாக சினிமாவில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. அதனால் சில படங்களில் அம்மா அண்ணி போன்ற கேரக்டர்களில் நடுத்தர வயது பெண்மணியாக அவர் நடித்து வருகிறார். கடந்தாண்டில் பாஜக கட்சியில் நடிகை கஸ்தூரி தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கஸ்தூரி கூறியதாவது, எனக்கு பெரியாரை அறிமுகப்படுத்தியது மணிவண்ணன், சத்யராஜ் இருவரும்தான். மணிவண்ணன் சாருக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தது. எனக்கும் படிக்கும் ஆர்வம் இருக்கிறது. ஓய்வு நேரங்களில் நானும் நிறைய புத்தகங்கள் வாசிப்பேன்.

எழுத்தாளர் கல்கி எழுதிய அத்தனை படைப்பு புத்தகங்களையும் ஒரு பிறந்தநாளுக்கு மணிவண்ணன் சார் எனக்கு பரிசாக கொடுத்தார். ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய பிறந்த நாள் அன்றுதான் மணிவண்ணன் சார் காலமானார். அதனால் அதில் இருந்து நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதையே விட்டுவிட்டேன் என்று நடிகை கஸ்தூரி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்