நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்தாண்டில் இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அநீதி படத்தில் வில்லி கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார். தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர் விஜயகுமார் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதா விஜயகுமாரை பொருத்தவரை எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பவர். சமீபத்தில் அவரது மகள் ஜோவிகா, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் தினமும் பிக்பாஸ் குறித்து ரிவ்யூ செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஒவ்வொரு போட்டியாளரையும் கடுமையாக விமர்சித்தார்.
இதில் நடிகர் கமல்ஹாசனும் இதில் தப்பவில்லை. என் மகள் மீது இப்படி தவறான அபிப்ராயங்களை ஏற்படுத்தக் கூடாது. என் மகள் மெச்சூரிட்டி ஆனவள். வெளியில் வந்து அவள் கோர்ட்டில் வழக்கு போடுவாள். இல்லை என்றால், என் வக்கீல்களிடம் ஆலோசித்து வழக்கு போடுவேன் என்றார்.
இதற்கிடையே இந்தமுறை பிக்பாஸ் வின்னர் ஆக அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவித்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவருக்கு வந்ததெல்லாம் போலியான ஓட்டுகள்தான். பிக்பாஸ் நிகழ்ச்சி மீது எனக்கு நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன என்றும் பரபரப்பாக பேசி இருந்தார்.
இப்போது மற்றொரு விவகாரத்தை வனிதா விஜயகுமார் கிளப்பி விட்டிருக்கிறார். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3ல் கலந்துக்கொண்டேன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு என் பிறந்த நாள் வந்தது. அப்போது கமல்ஹாசனை சந்தித்த போது வாழ்த்து சொன்னார்.
அப்போது பிறந்த நாள் பரிசு வேண்டும் என்று கமலிடம் கேட்டேன். என்னை கட்டிப் பிடித்தார். இதெல்லாம் வேண்டாம் என்றேன். அதன்பின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். முத்தம் எல்லாம் எனக்கு வேண்டாம் என அதையும் வனிதா மறுத்துள்ளார். எனக்கு உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என வெளிப்படையாக கேட்டிருக்கிறார் வனிதா. சரி, படத்தில் வாய்ப்புதானே, கண்டிப்பாக தருகிறேன் என கூறிய கமல், இதுவரை என்னை அவரது படத்தில் நடிக்க அழைக்கவில்லை என வனிதா விஜயகுமார் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார்.





