- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசன் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து இயக்கும் பிரமாண்ட படம் - ஹீரோ பேரை...

அரசன் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து இயக்கும் பிரமாண்ட படம் – ஹீரோ பேரை கேட்டா… இது வேற லெவல் சம்பவமா இருக்குதே ப்ரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இப்போது நடிகர் சிம்பு நடிக்கும் அரசன் என்ற படத்தை வெற்றிமாறன் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நடிகைகள் ஆண்ட்ரியா யோகேஸ்வரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஜனவரி 3வது வாரத்தில் தொடங்க இருக்கிறது. அரசன் படம் வடசென்னை கதையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு தான். ஆனால் அப்போது சிம்பு நடிக்க முடியாமல் போன காரணத்தால் அந்த கேரக்டரில் தனுஷ் நடித்தார். இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு கலைக்களத்தில் சிம்பு நடிப்பது மிகப்பெரிய விறுவிறுப்பான ஒரு படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்துள்ளது

இதற்கிடையே மற்றொரு புதிய பரபரப்பான தகவல் கோலிவுட்டில் இப்போது வெளியாகி உள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களை மிகப்பெரிய சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் நடிகர் கமலஹாசன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் ஒரு புதிய படத்திற்காக இணைவது குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஆனால் இதுகுறித்த எந்த விதமான அறிவிப்பும் இதுவரை முறையாக வெளியாகவில்லை. ஆனால் நிச்சயமாக நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி பிரமாண்டமான ஒரு படத்திற்காக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக ரகசியமான ஒரு தகவல் கசிந்துள்ளது.

இது மட்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் வரும் 2026ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இது மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடிகர் கமல்ஹாசன் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படத்தை தந்துவிட்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார். அது இந்த படமாக கூட இருக்க அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்