- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கு… விஜய் மனசு வெச்சா தான் அது நடக்கும் -...

எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கு… விஜய் மனசு வெச்சா தான் அது நடக்கும் – தளபதியின் மாஜி ஹீரோயின் வைத்த வேண்டுகோள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்துடன் சினிமாவை விட்டு விலகப் போவதாக விஜய் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக அவர் இப்போது தேர்தல் களத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.

நடிகர் விஜய் நடிக்க வந்த ஆரம்பத்தில் பல கதாநாயகிகள் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். அந்த வகையில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் சுவாதி. கடந்த 1995ம் ஆண்டில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் தேவா. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. அதன் பிறகு அஜீத்குமாருடன் வான்மதி படத்தில் சுவாதி நடித்தார்.

- Advertisement -

தொடர்ந்து வசந்த வாசல் செல்வா நாட்டுபுற நாயகன் சொக்கத்தங்கம் யோகி என பல படங்களில் சுவாதி நடித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்த சுவாதி, வானத்தைப்போல படத்தின் கன்னட ரீமேக்கில் கௌசல்யா நடித்த ரோலில் நடித்தார். கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் சுவாதி நடிப்பதில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சுவாதி கூறியதாவது, சொக்கத்தங்கம் படத்தில் பிரகாஷ்ராஜின் தங்கையாக நடித்திருந்தேன். பிரேமலதா ஏதோ ஒரு நிகழ்ச்சியில் என்னை பார்த்துவிட்டு சொக்கத்தங்கம் படத்தில் நடிக்க வாய்ப்பு தருமாறு விஜயகாந்திடம் சொல்லி இருக்கிறார். அதன்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் அந்த படத்தில் நடித்தேன்.

- Advertisement -

தெலுங்கு கன்னட படங்களில் நான் நிறைய நடித்துள்ளேன். சொக்கத்தங்கம் படத்தில் நான் சௌந்தர்யா ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். நானும் சௌந்தர்யாவும் வெஜிடேரியன். சௌந்தர்யாவுக்கு சமைக்க என்று தனியாக சமையல் ஆட்கள் வருவார்கள். அப்போது சுவாதி என்னை போல வெஜிடேரியன் என்று சொல்லி சௌந்தர்யா என்னை அவருடன் அமர்ந்து சாப்பி வைப்பார்.

நடிகர் விஜய் நடித்த தேவா படத்தில்தான் நான் முதலில் நான் நாயகியாக நடித்தேன். அவரது கடைசி படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக நடிப்பேன். சின்ன ரோலாக இருந்தாலும் நடிப்பேன் என்று நடிகை சுவாதி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். ஆனால் ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு விஜய் விலக உள்ளார். அதனால் சுவாதி ஆசை நிறைவேற வாய்ப்பில்லை.

- Advertisement -

சற்று முன்