- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2-ல் விட்டதை அடுத்த 2 படங்களில் பிடிக்க திட்டம் போட்டுள்ள கமல்ஹாசன் - விவரம்...

இந்தியன் 2-ல் விட்டதை அடுத்த 2 படங்களில் பிடிக்க திட்டம் போட்டுள்ள கமல்ஹாசன் – விவரம் இதோ

- Advertisement -

உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் அண்மையில் வெளியாகிய “இந்தியன் 2” திரைப்படமானது மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கலவையான விமர்சனங்களுடன் சுமாரான வசூலையே பெற்றுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது பெரிய அளவில் வசூல் சாதனை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த படத்தில் முதல் வாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

அதோடு விக்ரம் 2 படத்தில் மாபெரும் வெற்றியை சந்தித்த கமலஹாசன் தற்போது இந்த படத்தின் மூலம் சறுக்களை சந்தித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 படம் விமர்சனங்களையும், ட்ரோல்களையும் சந்தித்து வருவது கமலஹாசனையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இருந்தாலும் இந்தியன் 3 படத்தின் மீது மிகப்பெரிய அளவில் கமல் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இந்தியன் 2 படத்தில் தான் நடிப்பதற்கு காரணமே இந்தியன் 3 தான் என்று கமல் அண்மையில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் நிச்சயம் இந்தியன் மூன்றாம் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கமலஹாசன் மற்றும் ஷங்கர் ஆகியோர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த படமானது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட சறுக்களை சமாளிக்கும் விதமாக தற்போது கமல் இரண்டு புதிய படங்களை விரைவு படுத்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் “தக் லைப்” திரைப்படம் கிட்டத்தட்ட முடிவடையுள்ள வேளையில் எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அதனை முடித்து விட்டு இந்த ஆண்டு இறுதியிலேயே அந்த படத்தை வெளியிட கமல் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியன் 3 திரைப்படத்தையும் வெளியிடும் வேளையில் தீவிரம் காட்ட உள்ளார்.

இந்தியன் 2 படத்தின் தோல்வியை அடுத்தடுத்த இரண்டு வெற்றிகளின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப கமல் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இந்தியன் 3 வெளியாவதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைப் படம் வெளியாக உள்ளது. அதில் கமலஹாசன் உடன் இணைந்து சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருவதால் அந்த படம் இப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்