பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இதில் பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, கானா பாலா, ஐஷு, ஆர்.ஜே.பிராவோ உள்ளிட்டோர் வீட்டிலிருந்து வெளியேறினர். அதேசமயம் நிகழ்ச்சியில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்ததால் மீண்டும் விஜய் வர்மாவை வீட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது நிகழ்ச்சி குழு.
சூழல் இப்படி இருக்க கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் பேசிய விசித்திரா, சினிமாவில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியிருந்தார். அதாவது ஒரு டாப் ஹீரோ தன்னை ரூமுக்கு அழைத்ததாகவும் ஆனால் தான் அங்கு செல்லவில்லை என்று கூறிய விசித்திரா, ஹீரோவின் ஆட்கள் எனது ரூம் கதவை தட்டினார்கள்; ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து ஒருவர் தன்னை தகாத முறையில் தொட்டார். ஆனால் சண்டை பயிற்சியாளரோ தன்னை அறைந்துவிட்டார் என்று கூறியிருந்தார்.
அவரது இந்த பேச்சை அடுத்து விசித்திரா சொன்ன ஹீரோ பாலகிருஷ்ணா என நெட்டிசன்கள் ஆதாரத்தை அடுக்க ஆரம்பித்தனர். மேலும் அவருக்கு எதிராக பல்வேறு ட்வீட்களையும், கமெண்ட்ஸ்களையும் பறக்கவிட்டனர் சமூக வலைதளவாசிகள். விசித்திரா சொன்ன சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்அடுத்தியது.
குறிப்பாக விசித்திராவின் பேச்சுக்கு கமல் ஹாசனின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதும் ஒருபக்கம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பாக இருந்தது. விசித்திராவுக்கு அந்த கொடுமை நடந்த போது உதவிய சாஜி (இப்போது விசித்திராவின் கணவர்), கமல் ஹாசன் இந்த டாபிக் குறித்து பேசமாட்டார் என்றே கருதுகிறேன் என சொல்லியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ஹவுஸ் மேட்ஸ்களிடம் கமல் ஹாசன் பேசினார். அப்போது ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்த அவர், “இன்று ஒரு ஜெண்டில்மேனுக்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன். அவர் மூன்று பிள்ளைகளை வளர்த்துவருகிறார். அவர்களையும் தன்னை போலவே சிறந்த குணமுடையவர்களாக வளர்ப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அந்த நபரின் பெயர் சாஜி. விசித்திராவின் கணவர். அவரிடம் பேசியபோது ஒன்று சொன்னார், ‘அந்த சம்பவம் நடந்த பிறகுதான் விசித்திரா எனக்கு மனைவியாக மாறினார். ஆனால் அந்த இடத்தில் விசித்திரா தவிர்த்து வேறு யார் இருந்திருந்தாலும் நான் அப்படித்தான் தவி செய்திருப்பேன்’ என்றார். அது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது” என பேசினார் கமல் ஹாசன்.





