- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரேக் இன்ஸ்பெக்டர் வேலையுடன் ராஜ்ய சபா எம்பி பதவியை ஒப்பிட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் - நடிகர்...

பிரேக் இன்ஸ்பெக்டர் வேலையுடன் ராஜ்ய சபா எம்பி பதவியை ஒப்பிட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் – நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் வேதனை!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ் சினிமாவில் பல அடையாளங்கள் உண்டு. இயக்குனர் தயாரிப்பாளர் பாடல் ஆசிரியர் திரைக்கதை எழுத்தாளர் வசனகர்த்தா தொழில்நுட்ப கலைஞர் என கலைத்துறையில் கமல்ஹாசன் சகல கலைகளும் கற்ற வித்தகர். அதனால்தான் அவரை சகலகலா வல்லவன் என்று ரசிகர்கள் அழைத்தனர். சினிமா துறையில் கமல் ஒரு மேதாவி என்றால் அது மிகையல்ல.

ஒரு கலைஞனாக எல்லாவிதமான பாராட்டுகளுக்கும் தகுதியான கமல்ஹாசன் மீது பலவிதமான விமர்சனங்களும் சர்ச்சைகளும் காலம் காலமாக இருந்து வருகின்றன. இது அவருக்கும் தெளிவாகவே தெரியும். என் வீட்டு வரவேற்பறை வரை மட்டுமே உங்களுக்கு அனுமதி, படுக்கையறையை ஏன் எட்டிப் பார்க்கிறீர்கள் என பலமுறை கமல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக சொந்த வாழ்க்கையில் 2 திருமணங்கள் செய்து விவாகரத்து, நடிகை கௌதமியுடன் தாலி கட்டாமல் குடும்ப வாழ்க்கை, ஸ்ரீதேவி ஸ்ரீப்பிரியா ஆண்ட்ரியா சிம்ரன் பூஜாகுமார் என பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர் கமல்ஹாசன். இப்போதும் கூட 70 வயதில் திரிஷாவுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் கமல் நடித்திருப்பதும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போது மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக, தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளில் ஒருவராக கமல் இருந்து வருகிறார். மநீம கட்சி ஆரம்பித்த போது திமுகவை கடுமையாக விமர்சித்து ஸ்டார்ச் லைட்டால் டிவியை எல்லாம் உடைத்து வீர வசனம் பேசிய கமல்ஹாசன், திமுகவின் தீவிர விசுவாசியாக மாறிய பல மாதங்கள் ஆகி விட்டது.

- Advertisement -

இப்போது திமுக ஆதரவால் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பி ஆக இருக்கிறார். 2 தினங்களுக்கு முன் அதற்கான வேட்பு மனுவை நடிகர் கமல்ஹாசன் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தாக்கல் செய்தார். இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அரசியல் வாழ்க்கையில் இந்தியன் தாத்தாவாக இருப்பார் என மக்கள் எதிர்பார்த்த நடிகர் கமல்ஹாசன், கடைசியில் பிரேக் இன்ஸ்பெக்டர் சந்துரு தான் என் நிஜ கேரக்டர் என்று நிரூபித்து விட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தியன் படத்தில் பதவிக்காக சந்துரு கேரக்டரில் ஒரு வீட்டில் முறைவாசல் செய்வார் கமல்ஹாசன். அந்த வீட்டு அம்மாவுக்கு ஜாக்கெட் தைத்து கொடுப்பது, அந்த வீட்டு பெண்ணுக்கு பாவாடை நாடா கோர்ப்பது என பிரேக் இன்ஸ்பெக்டர் வேலைக்காக எடுபிடி வேலைகளை செய்வார். அதே போல் ராஜ்யசபா எம்பி பதவிக்காக திமுகவின் விசுவாசியாக மாறியதை நெட்டின்சகள் மீம்ஸ் வெளியிட்டு கலாய்க்கின்றனர். இது கமல் ரசிகர்களை மிகவும் வேதனையில் தள்ளியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்