- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஒரு விஷயத்துக்காக குஷ்பு கதறி அழுதார்; நான் செய்த தவறு அப்போது எனக்கு புரியவில்லை...

அந்த ஒரு விஷயத்துக்காக குஷ்பு கதறி அழுதார்; நான் செய்த தவறு அப்போது எனக்கு புரியவில்லை – இயக்குனர் சுந்தர் சி ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுந்தர் சி. ஜெயராம் குஷ்பு நடித்த முறைமாமன் படத்தை இயக்கும்போது குஷ்புவுக்கும் சுந்தர் சிக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துக்கொண்டனர். 2 மகள்கள் உள்ளனர். சுந்தர் சி தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். சில படங்களில் நடித்தும் வருகிறார்.

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் உருவாகிறது. அதே போல் அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 5 படத்தை இயக்குவதற்கான முதல்கட்ட பணிகளை சுந்தர் சி துவங்கியிருக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நேர்காணலில் இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, நான் முதன் முதலாக வாங்கிய என் வீட்டை விற்கும் போது, நான் ஒரே ஒரு முடிவைதான் எடுத்தேன். நான் விக்கிற என்னுடைய கடைசி சொத்து இதுதான். இதற்கும் அன்பே சிவம் படத்துக்கும் சம்பந்தமில்லை.

எனக்கு வரவேண்டிய பணம் அப்போது வரவில்லை. அப்போது நிறைய டேக்ஸ் பிரச்னை இருந்தது. அதனால் வங்கி கணக்கு எல்லாம் சீஸ் பண்ணிட்டாங்க. இப்போது இருக்கிற உலக அறிவு ஞானம் எல்லாம் அப்போது கிடையாது. அப்போது நான் ஈஸியா ஒரு கடன் வாங்கி பிரச்னையை சால்வ் பண்ணி இருக்கலாம்.

- Advertisement -

அப்போது நான் ஒரு கோபத்தில் இருந்தேன். ஒரு ரோஷத்தில் இருந்தேன். ஜெயித்து காட்டுகிறேன் பார் என்ற எண்ணத்தில் அந்த இடத்தை விற்று விட்டேன். அந்த இடத்தை விற்கும் வரை அதை நான் ஒரு சென்டிமென்ட் ஆக நினைக்கவில்லை. பிரச்னைகளை சால்வ் செய்வதுதான் முக்கியமாக எனக்கு இருந்தது. பிரச்னைகள் இல்லாமல் சந்தோஷமாக வாழ்வதுதான் என் கொள்கையாக இருந்தது.

ஆனால் என் மனைவி குஷ்பு, நான் முதல் தடவையாக வாங்கிய சொத்து என்ற சென்டிமென்டில் கதறி அழுதார். அப்போதுதான் அந்த சென்டிமென்ட் எனக்கும் புரிந்தது. இனிமேல் வாழ்க்கையில் அவர் கண்ணில் கண்ணீரை பார்க்க கூடாது என்ற முடிவை எடுத்தேன். இப்போது வரை என் மனைவி, பிள்ளைகள் குடும்பத்தை சந்தோஷமாக நன்றாக வைத்திருக்கிறேன். இது என்னுடைய லட்சியம் என்று கூட சொல்லலாம், என்று சுந்தர் சி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்