தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. அசோக் செல்வன் நாயகனாக நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அஸ்வத் மாரிமுத்துவுக்கு நல்ல அடையாளம் ரசிகர்களிடம் கிடைத்தது. அதன்பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தை அவர் டைரக்ட் செய்தார்.
டிராகன் படமும் கடந்தாண்டில் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. அதன்பிறகு நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்க அஸ்வத் மாரிமுத்து கமிட் ஆனார். அந்த படத்துக்கான கதை ஸ்கிரிப்ட் எழுதுவதில் அவர் தீவிரம் காட்டி வந்தார்.
இதற்கிடையே கூலி படத்தை முடித்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் சில இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டார். பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அஸ்வத் மாரிமுத்து எச் வினோத் ஆர்ஜே பாலாஜி என பலரிடம் அவர் கதை கேட்ட நிலையில் கடைசியாக சிபி சக்ரவர்த்தி சொன்ன கதைக்கு ஓகே சொல்லி விட்டார்.
அந்த கதை தான் தலைவர் 173 என்ற படமாக உருவாகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது. இந்த விஷயத்தில் நடிகர் ரஜினிக்கு கதை சொல்லும் ஆர்வத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் சிம்புவுக்கு கதை ஸ்கிரிப்ட் எழுதாமல் சில மாதங்கள் கிடப்பில் போட்டு விட்டார்.
இதனால் பயங்கர கடுப்பான நடிகர் சிம்பு, அஸ்வத் மாரிமுத்துவிடம் கோபப்பட்டுள்ளார். மேலும் சீக்கிரமாக ஸ்கிரிப்ட் ரெடி செய்யுங்கள். வருகிற மே மாதம் ஷூட்டிங் போக வேண்டும் என்றும் கண்டிஷனாக கூறியிருக்கிறார். அஸ்வத் மாரிமுத்துவும் கதை ரெடி செய்துவிட்டதாக கடந்த வாரத்தில் தகவல் வெளியானது.
இந்த சூழலில், ரஜினிக்கு அஸ்வத் மாரிமுத்து சொன்ன கதை கமலுக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் இதுகுறித்து நேரில் பேச ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து அஸ்வத் மாரிமுத்துவுக்கு அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து சிம்புவிடம் அஸ்வத் கூறியிருக்கிறார். எக்கச்சக்கமான டென்சன் ஆன சிம்பு, முதலில் என் படத்தை எடுத்து முடியுங்கள். அடுத்து நீங்கள் அந்த படத்தை டைரக்ட் செய்ய போகலாம் என்று கட் அண்ட் ரைட்டாக கூறியிருக்கிறார். இதனால் கமல் படத்தை இயக்கும் வாய்ப்பு தள்ளிப் போகிறதே என அஸ்வத் மாரிமுத்து அப்செட்டில் இருந்து வருகிறார்.





