- Advertisement -
Homeபொழுதுபோக்குமெய்யழகன் படத்தில் இப்படி ஒரு தரமான சம்பவம் நடந்திருக்கிறதா? இதுவரைக்கும் இந்த விஷயம் வெளியவே வரலையே?...

மெய்யழகன் படத்தில் இப்படி ஒரு தரமான சம்பவம் நடந்திருக்கிறதா? இதுவரைக்கும் இந்த விஷயம் வெளியவே வரலையே? – கமல் எப்பவுமே வேற லெவல்தான்

- Advertisement -

நடிகர் கார்த்தி, கடந்த 2007ம் ஆண்டில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே பெரிய வெற்றியை கார்த்திக்கு கொடுத்தது. இந்த படம்தான் இதுவரை கார்த்தி நடித்த படங்களில் மிக முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது. பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் கார்த்திக்கு மாஸ் தந்தது பருத்திவீரன்தான்.

கார்த்தி நடிப்பில் பல படங்கள் பெரிய வெற்றி பெற்ற நிலையில், அவரது 25வது படம் 2023ம் ஆண்டில் தீபாவளியன்று வெளியாகி படுதோல்வியடைந்தது. ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜூ முருகன் இப்படி ஒரு சொதப்பலான படத்தை தருவாரா என ரசிகர்களே அதிர்ச்சியடையும் அளவுக்கு ஜப்பான் படம் மிக மோசமான ஒரு படமாக குருவி, சுறா, இந்தியன் 2 அளவுக்கு இருந்து ரசிகர்களை கதற வைத்தது.

- Advertisement -

கார்த்தி நடித்த படங்களில் கொம்பன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, கைதி, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் 1 என பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், ஜப்பான் படம் இப்படி ஒரு சொதப்பலான படமாக அமையும் என்று நடிகர் கார்த்தியும் எதிர்பார்க்கவில்லை.

அதனால் நிச்சயம் அடுத்து ஒரு பெரிய வெற்றிப் படத்தை தர வேண்டும் என்ற நிலையில் நடிகர் கார்த்தி நடித்த படம் வா வாத்தியாரே என்ற படமும், அதையடுத்து பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என 2 படங்களிலும் கார்த்தி கமிட் ஆகி நடித்து வந்தார். இதில் மெய்யழகன் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடக்சன் பணிகளும் நிறைவடைந்துள்ளது.

- Advertisement -

மிகப்பெரிய மாஸ் ஹிட் படமான 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான படம் மெய்யழகன் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் நடிகர் அரவிந்த் சாமியும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோவையில் நடந்தது. மெய்யழகன் படம் வருகிற 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் மெய்யழகன் படத்தில் நடிகர் கமல்ஹாசன் இரண்டு பாடல்களை பாடியிருப்பது தெரிய வந்துள்ளது. நான் போகிறேன், யாரோ இவன் யாரோ என்ற 2 பாடல்களை நடிகர் கமல்ஹாசன், தனது சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். கோவிந்த வசந்தா இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

- Advertisement -

சற்று முன்