- Advertisement -
Homeபொழுதுபோக்கு1 நிமிடம் 19 விநாடிகள் கொண்ட ஏஐ வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை ரஜினிக்கு சொன்ன...

1 நிமிடம் 19 விநாடிகள் கொண்ட ஏஐ வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை ரஜினிக்கு சொன்ன கமல்ஹாசன் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை வெகு விமரிசையாக ஒரு பண்டிகையை போல கொண்டாடி வருகிறார்கள். கோவில்களில் அன்னதானம் சிறப்பு பூஜை தேர் இழுத்தல் இலவச நோட் புத்தகங்கள் வழங்குதல் என பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை அவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

இன்று ரஜினியின் பிறந்தநாள் மட்டும் இன்றி, சினிமா பயணத்தில் அவரது 50வது ஆண்டு நிறைவு பொன்விழா என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் இன்று ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வந்த படையப்பா படம் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதனால் இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாள், பொன்விழா மற்றும் படையப்பா ரி ரிலீஸ் என முப்பெரும் விழாவாக ரசிகர்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பிரபல நடிகர்கள் நடிகைகள் தொழிலதிபர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் நீண்டகால திரையுலக நண்பரும் சகோதரர் போன்ற அன்பும் கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன், ரஜினிக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை ஏஐ வீடியோ ஒன்றில் மூலம் கூறியிருக்கிறார். தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு ஏஐ வீடியோ ஒன்றை பாடல் காட்சியுடன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த வீடியோவில், உன் போல் யாருமில்லையே… ஈரேழு உலகம் தேடியுமே… மாறாத வைரம் உன் அகமே… என் அருமை நண்பனே நண்பனே நண்பனே… ஊர் போற்றும் இன்பனே இன்பனே இன்பனே… நீ தனி நான் தனி என்று இல்லை, என்றுமே நாம் அது நிரந்தரமே… நாம் அது நிரந்தரமே… என்று ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என முடியும் விதமாக 1 நிமிடம் 19 வினாடிகள் கொண்ட வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் அன்றைய காலகட்டத்தில் நடித்த பல படங்களில் நடித்த காட்சிகளும், அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொண்ட புகைப்படங்களும் இந்த ஏஐ வீடியோவில் இடம்பெற்று பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இணையத்தில் இந்த ஏஐ வீடியோ ட்ரெண்டிங் ஆகி வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்