- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல்ஹாசனின் குடும்பத்தில் திடீரென நிகழ்ந்த பேரிழப்பு... கண்ணீர் விட்டு கதறிய உலக நாயகனின் மகள்கள்...

கமல்ஹாசனின் குடும்பத்தில் திடீரென நிகழ்ந்த பேரிழப்பு… கண்ணீர் விட்டு கதறிய உலக நாயகனின் மகள்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் கமல்ஹாசன். தனது சிறு வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் தொடங்கிய அவரது பயணம், இன்று இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரை தொடர்கிறது.

 

கமல்ஹாசனை பார்க்கையில் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகர் இல்லை என்று நாம் அடித்துக் கூறலாம். அந்த அளவுக்கு நடிப்பிலும், தனது உடல் மொழியிலும் பெயர் போனவர் இந்த உலக நாயகன். நடிப்பின் பல்கலைக்கழகமான இவர், நாயகன், இந்தியன் என மூன்று திரைப்படங்களுக்கு தேசிய விருதை வென்றிருக்கிறார்.

 

நடிப்பில் மட்டுமல்ல இயக்கத்திலும் கமல்ஹாசன் கொடிகட்டி பறக்கிறார். கமல்ஹாசனின் இயக்கத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக ஹேராம் மற்றும் விருமாண்டி ஆகிய இரண்டு திரைப்படங்களை கூறலாம். அதிலும் குறிப்பாக விருமாண்டி திரைப்படம், தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான கதைக்களத்தை ரசிகர்களுக்கு கூறியது.

 

முதல் பாதியில் ஒரு கதையையும், இரண்டாம் பாதியில் அந்தக் கதையில் இருக்கும் உண்மையையும் விவரமாகவும், இயக்கத்தின் மொழியை கலந்தும் கூறியிருப்பார் உலகநாயகன். அந்த சமயத்தில் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், இன்று வரை ரசிகர்களால் விருமாண்டி கொண்டாடப்பட்டு தான் வருகிறது.

 

இப்படி கலை உலகிற்கு அவர் சேர்த்த பெருமைகள் ஏராளம். கமல்ஹாசனின் திரையுலக பயணத்திற்கு தூணாக இருந்தவர் அவரது மாமா சீனிவாசன் தான். அவர் திரையுலக பயணத்திற்கு மிகப்பெரும் சக்தியாக இருந்த சீனிவாசன், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92. இந்த நிலையில் சீனிவாசனின் மறைவு குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

 

அதில் தனது ஆளுமை உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்கு வகித்த சீனிவாசன் மாமா, கொடைக்கானலில் காலமானதாகவும், அவரது இறுதிச்சடங்கு மக்கள் நீதி மையம் அலுவலகத்தில் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து சென்னையில் அவரது உடல் கொண்டுவரப்பட, கமல்ஹாசனின் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். உலக நாயகனின் மகள்களான, ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் தனது தாத்தா சீனிவாசன் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனைத் தொடர்ந்து, பெசன்ட் நகரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

சற்று முன்