- Advertisement -
Homeபொழுதுபோக்குகாட் பிளஸ் யூ மாமே... குட் பேட் அக்லியிலிருந்து அடுத்த போஸ்டரை வெளியிட்ட படக்குழு... தக்...

காட் பிளஸ் யூ மாமே… குட் பேட் அக்லியிலிருந்து அடுத்த போஸ்டரை வெளியிட்ட படக்குழு… தக் காட்டும் தல…

- Advertisement -

த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இளைஞர்களை கவர்வதற்காக இரட்டை அர்த்தமுறையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பலரிடமும் திட்டு வாங்கியது. ஆனால் வசூல் ரீதியாக திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் வெற்றிவாகை சூடியது.

 

- Advertisement -

இந்த ரூட் நன்றாக இருப்பதால், அதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இதில் அவருக்கு இரண்டாவது திரைப்படம் ஆக சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் அமைந்தது. ஆனால் அந்த திரைப்படம், படு தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் சிம்பு ஒழுங்காக சூட்டிங் வராதது தான் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் கூறினார்.

 

- Advertisement -

இந்த தோல்வியிலிருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்ட ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அப்போது அஜித்துடன் அவர் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தன்னை எங்கு சென்றாலும் அஜித் ரசிகராகவே காட்டிக் கொள்ளும் ஆதிக் ரவிச்சந்திரன், அந்த சமயத்தில் அஜித் குமாரிடம் கதை ஒன்றையும் கூறியிருக்கிறார்.

 

அப்போது அஜித் நீங்கள் ஒரு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்துவிட்டு, வந்தால் நாம் இணைவதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல, பெரிய திரைப்படத்திற்கே நீங்கள் முயற்சி செய்யுங்கள் என்றும் ஊக்கப்படுத்தி இருக்கிறார் அஜித். இதன் பின்னணியில்தான் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதை ஆதிக் ரவிச்சந்திரனே தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

 

மார்க் ஆண்டனி திரைப்படமும் சொல்லி வைத்தார் போல் மிகப் பெரிய வெற்றியை பெற, தற்போது அஜித் குமார் ஆதிக் கூட்டணி உருவாகி இருக்கிறது. தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, குட் பேட் அக்லி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

 

வீரம் திரைப்படத்திற்கு பிறகு, அஜித் திரைப்படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் இதில் இசையமைக்கிறார். இதில் ஏற்கனவே வெளியான முதல் போஸ்டரில், மூன்று கெட்டப்புகளில் அஜித் இருந்தார். அதில் அவரது தோற்றமே வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் படத்திலிருந்து இரண்டாவது போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதில் அஜித் நாக்கை துருத்தியபடி தக் போஸ் கொடுத்திருக்கிறார். இதனைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்