- Advertisement -
Homeபொழுதுபோக்குநண்பர் ரஜினியுடன் தனது மகள் ஸ்ருதிஹாசன் நடித்த படம் - கூலி இசை வெளியீட்டு விழாவில்...

நண்பர் ரஜினியுடன் தனது மகள் ஸ்ருதிஹாசன் நடித்த படம் – கூலி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பாரா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 6வது படமாகவும் நடிகர் ரஜினிகாந்தின் 171வது படமாகவும் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக கூலி ரிலீஸ் ஆகிறது.

மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு ஏறக்குறைய 37 ஆண்டுகளுக்கு பின் நடிகர் சத்யராஜ், ரஜினிகாந்துடன் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். கன்னட நடிகா் உபேந்திரா மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் இந்தி நடிகர் அமீர்கான் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இதில் மோனலிசா என்ற ஒரு ஐட்டம் பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டிருக்கிறார். அவருடன் மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் போட்ட அதிரடி ஆட்டம் பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. மேலும் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் கூலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜூலை 27ம் தேதி நடக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியான நிலையில் இப்போது அது ஆகஸ்ட் 2ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிஸியாக இருப்பதால் இந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசப் போகிறார் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

மேலும் நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நெருங்கிய நண்பர்கள். ஆரம்பத்தில் அவர்கள் பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்போது கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் கூலி படத்தில் முக்கிய கேரக்டரில் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார். அத்துடன் தனது தீவிர ரசிகர் மற்றும் விக்ரம் மாஸ் ஹிட் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் கூலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனால் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நண்பர் ரஜினி, மகள் ஸ்ருதிஹாசன், ரசிகர் லோகேஷ் கனராஜ் என 3 பேருமே கமலின் நெருங்கிய அன்புக்கு உரியவர்கள் என்பதால் கூலி இசை வெளியீட்டு விழாவில் கமல் பங்கேற்பது முக்கியம் என்றும் கோலிவுட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ராஜ்யசபா எம்பி ஆக அடுத்த மாதம் இறுதி வரை பார்லிமென்ட் கூட்டங்களுக்காக டெல்லியில் தங்கி இருக்கும் கமல்ஹாசன், சென்னைக்கு இந்த விழாவில் பங்கேற்க வருவாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்