- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி கமல் நடிக்கும் படத்தை இயக்கப் போவது அந்த இயக்குனர்தான் - கோலிவுட்டில் தீயாக பரவும்...

ரஜினி கமல் நடிக்கும் படத்தை இயக்கப் போவது அந்த இயக்குனர்தான் – கோலிவுட்டில் தீயாக பரவும் தகவல்… உண்மையா உருட்டான்னு தெரியலையே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் 46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரண்டு சிகரங்கள் இணைகின்றன. நினைத்தாலே இனிக்கும் படம் கடந்த 1979ம் ஆண்டில் வெளியானது. அந்த படத்துக்கு பின் ரஜினி கமல் இருவரும் இதுவரை இணைந்து நடிக்காத நிலையில் இப்போது மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது உறுதியாகி விட்டது.

கோவை விமான நிலையத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் இதை உறுதிப்படுத்தி விட்டார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயின்ட் முவீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தில் நானும் கமலும் நடிக்க உள்ளோம். ஆனால் இயக்குனர் கதை கதாபாத்திரம் இன்னும் முடிவாகவில்லை என்று உறுதியாக கூறிவிட்டார்.

- Advertisement -

ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப் போவது லோகேஷ் கனகராஜ்தான் என்று தகவல் பரவிய நிலையில், நிச்சயமாக அவர் இல்லை என்பதை ரஜினியே தெளிவுபடுத்தி விட்டார். கமல் நடித்த விக்ரம் படம் பெரிய ஹிட் என்றாலும் ரஜினி நடித்த கூலி படம் பெரிய அளவில் விமர்சனத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

அதனால் கமல் தரப்பில் லோகேஷ் கனகராஜூக்கு ஓகே சொன்னாலும் ரஜினிக்கு துளியும் விருப்பமில்லை. அதனால்தான் ரஜினி இயக்குனர் கதை இன்னும் முடிவாகவில்லை என்பதை உறுதியாக கூறிவிட்டார். அதனால் லோகேஷ் கனகராஜ் வேண்டாம் என்பதில் ரஜினி முடிவாக இருக்கிறார். ஏனென்றால் கூலி படம் அந்தளவுக்கு மோசமான கடும் விமர்சனங்களை சந்தித்து விட்டது.

- Advertisement -

இந்நிலையில் ரஜினி கமல் இணையும் படத்தை இயக்க அதிக வாய்ப்பு இயக்குனர் சுந்தர் சிக்கு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினி நடித்த அருணாசலம் கமல் நடித்த அன்பே சிவம் என 2 படங்களை ஹிட் கொடுத்தவர். அன்பே சிவம் தியேட்டரில் வரவேற்பை பெறாத போதிலும், 10 ஆண்டுகளுக்கு பின் அந்த படம் கொண்டாடப்பட்டது.

அதே போல் அருணாசலம் படம் ரஜினிக்கு ஹிட் கொடுத்தது. பொதுவாக சுந்தர் சி படங்கள் என்றாலே கமர்ஷியலாக வெற்றிப்படமாக தான் இருந்து வருகிறது. மிகவும் நம்பிக்கையான நட்சத்திர இயக்குனர். காமெடி கமர்ஷியல் ஆக்சன் என எல்லாவிதமான கதைக்களமும் அவருக்கு அத்துப்படி. ஜனரஞ்சகமான கதை பண்ணுவதில் கில்லாடி என்பதால் ரஜினி கமல் படத்தை இயக்க சுந்தர் சிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்