- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைப் படத்தில் அந்த விஷயத்தை இரண்டே மணி நேரத்தில் முடித்த கமல்ஹாசன்... உலக நாயகனை...

தக் லைப் படத்தில் அந்த விஷயத்தை இரண்டே மணி நேரத்தில் முடித்த கமல்ஹாசன்… உலக நாயகனை பார்த்து ஆச்சரியப்பட்ட படக்குழு…

- Advertisement -

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவான நாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். 1987 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்தின் தாக்கம், பல ஆண்டுகள் கடந்தாலும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் வேலு நாயக்கர் ஆகவே வாழ்ந்திருந்தார் கமல்ஹாசன்.

 

- Advertisement -

கமல்ஹாசனின் அசுரத்தனமான நடிப்பிற்கு நாயகன் சரியான தீனி போட்டது என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதுக்கும் முத்தமிட்டார் உலகநாயகன். இளையராஜாவின் இசையிலும், மணிரத்னத்தின் இயக்கத்திலும் நட்சத்திரமாக மின்னியது நாயகன் திரைப்படம்.

 

- Advertisement -

இந்த நிலையில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு இது ஒன்றே போதும் என்று, ரசிகர்கள் குதூகலிக்க ஆரம்பித்தனர். இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

அதுமட்டுமில்லாமல் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோ ஜூ ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பும் செர்பியா நாட்டில் தொடங்கியது. ஆனால் தேர்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

 

இன்னொரு பக்கம் கால் சீட் பிரச்சினை காரணமாக, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் படத்தில் இருந்து விலகினர். இதன் காரணமாக, சிம்பு மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லியில் தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் சிம்புவும் பங்கேற்று உள்ளார்.

 

இதனிடையே, விரைவில் கமல்ஹாசனும் இந்த சூட்டிங்கில் இணைய இருக்கிறார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் படத்திற்கு கமல்ஹாசன் ஒரு பாடலை எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் வெறும் இரண்டே மணி நேரத்தில் இந்த பணியை அவர் முடித்திருக்கிறாராம். இது கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

 

- Advertisement -

சற்று முன்