- Advertisement -
Homeபொழுதுபோக்குஏதே... தக் லைப் திரைப்படம் இத்தனை மணி நேரம் ஓடுகிறதா... தாங்குவார்களா ரசிகர்கள்...

ஏதே… தக் லைப் திரைப்படம் இத்தனை மணி நேரம் ஓடுகிறதா… தாங்குவார்களா ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் தற்போது எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் தக் லைப். இதற்கு மிக முக்கிய காரணம் கமல்ஹாசன் மணிரத்னம் என்னும் இந்த கூட்டணிதான். இவர்கள் இருவரும் இணைந்து வழங்கிய நாயகன் திரைப்படம் இப்போது வரை தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது.

காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை வழங்கிய இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்து இருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார். திரிஷா, நாசர், அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் கமல்ஹாசனுக்கு ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதில், கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக அமரன் எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருப்பது தெரியவந்துள்ளது.

தந்தைக்கும் வளர்ப்பு மகனுக்கும் இடையேயான மோதல்தான் இந்த திரைப்படத்தின் ஒன் லைன் என்று கூறப்படுகிறது. அதிலும் முன்னோட்டத்தில், இனி நான் தான் ரங்கராய சக்திவேல் என சிம்பு கூறும் டயலாக் பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் வெளியான ஜிங்குச்சா பாடல் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது.

- Advertisement -

பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கும் கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் தலை மறைவு வாழும் வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறார். அப்போது அந்த இடத்தை சிம்பு கைப்பற்ற நினைக்கிறார். இதன் பிறகு ஏற்படும் மோதல்தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம் திரைப்படமும் இதே கதை அம்சத்தை தான் கொண்டிருந்தது. ஒருவேளை அந்த திரைப்படத்தின் நகல்தானா இது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே தக் லைப் திரைப்படத்திலிருந்து சுகர் பேபி பாடல் நாளை வெளியாகிறது. படத்திற்கு யுஏ தணிக்கை சான்று கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் இந்தத் திரைப்படத்தின் நீளம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது இரண்டே முக்கால் மணி நேரம் திரையரங்குகளில் உட்கார வேண்டுமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்